Actor Rajinikanth and Sivakarthikeyan: ரொம்பவே படு சுட்டியாக தொடர்ந்து பல படங்களில் வெற்றியை கொடுத்து மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்தவர் தான் சிவகார்த்திகேயன். தொடர் வெற்றியை கொடுத்து வந்த இவர் கடைசியாக நடித்த பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாமல் படுதோல்வி சந்தித்தது.
இதனை அடுத்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் படத்தை ரொம்பவே நம்பிக்கை வைத்து வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இதை சிவகார்த்திகேயன் இரு தினங்களுக்கு முன்பு மாவீரன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்ற போது இவருடைய ஆதங்கத்தை அனைவரது முன்னாடியும் கொட்டி தீர்த்து இருக்கிறார்.
அத்துடன் இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்தில் அரசியல்வாதியாக வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கிறார். அத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் சரிதா மற்றும் யோகி பாபு நடித்துள்ளார்கள்.
சரிதா ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அதுவும் சிவகார்த்திகேயனின் அம்மாவாக அவருடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து இசை வெளியீட்டு விழாவில் நடிகை சரிதா, சிவகார்த்திகேயனை பற்றி மேடையில் அவருக்கு சொம்பு தூக்கும் விதமாக வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார்.
அதாவது சிவகார்த்திகேயனின் உடல் மொழியும், குரலும் பார்ப்பதற்கு ரஜினி போலவே இருக்கிறது. நான் ரஜினியுடன் சேர்ந்து நெற்றிக்கண் படத்தில் அவருக்கு வில்லியாக நடித்திருக்கிறேன். அவர் படப்பிடிப்பின் போது எப்படி இருப்பார் என்பதை அவரை பார்த்து வந்ததால், சிவகார்த்திகேயனை பார்த்தவுடன் எனக்கு குட்டி ரஜினிகாந்த் போல தான் தெரிகிறார் என்று சொல்லி இருக்கிறார்.
அத்துடன் அவரிடம் இருந்த அதே சுறுசுறுப்பும் வேகமும் இவரிடமும் இருக்கிறது. மேலும் எனக்கு படப்பிடிப்பின் போது சிவகார்த்திகேயன் படத்தில் தான் நடிக்கிறோம் என்பதை மறந்து சில சமயங்களில் ரஜினி படத்தில் நாம் நடித்துக் கொண்டிருக்கும் என்று நினைக்கும் வகையில் அவருடைய நடவடிக்கைகள் எனக்கு ரஜினி போலவே பிரதிபலித்து இருக்கிறது என்று சிவகார்த்திகேயனை ரஜினிக்கு ஒப்பிட்டு சொம்பு தூக்கி இருக்கிறார்.