Rashmika Mandanna Net Worth : Clean and clear face of India என்ற பெருமையுடன் திரையுலகில் பிரவேசித்த ராஷ்மிகா மந்தனா, தனது யதார்த்தமான நடிப்பினால் கன்னடம், தெலுங்கு தமிழ் என தென்னிந்தியாவின் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.
புஷ்பா, கீதா கோவிந்தம் மற்றும் தமிழில் கார்த்தியுடன் சுல்தான், விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். அறிமுகமான சில வருடங்களிலேயே சைமா மற்றும் பிலிம் பேர் அவார்ட்ஸ் வாங்கிய ராஷ்மிகாவை அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட ராஷ்மிகா, மாடலிங் மூலமாக தனது கேரியரை தொடங்கி 2016ல் “கிரிக் பார்ட்டி” என்ற கன்னடம் படத்தில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே புதுமுக நடிகைக்கான சைமா அவார்டு பெற்றுள்ளார்.
தான் நடிக்கும் படத்திற்கு 60 லட்சம் முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கும் ராஷ்மிகா இன்வெஸ்ட்மென்ட் செய்வதில் படு கில்லி. தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு 58 கோடிக்கும் மேல். பெங்களூர்,மும்பை,கோவா என முக்கியமான நகரங்களில் பிளாட் வாங்கி குவித்து வருகிறார். ஹிந்தி திரை உலகை முற்றுகையிட்டுள்ள ராஷ்மிகா மும்பையில் மட்டும் இரண்டு பிளாட் வாங்கியுள்ளார்.
ஆடி, மெர்சிடிஸ், டொயோட்டா, இன்னோவா, பென்ஸ் போன்ற ஆடம்பர சொகுசு கார்களை வரிசை கட்டி நிறுத்தியுள்ளார். ஸ்வீட் அண்ட் ஹார்ட் ஆக போஸ் கொடுக்கும் ராஷ்மிகாவிற்கு இன்ஸ்டாகிராமில் 38 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர். “டியர் காம்ரேட்” படத்திற்கு மட்டும் 4 கோடிகள் சம்பளம் வாங்கி உள்ளார் ரஸ்மிகா. இதிலிருந்து தான் அவர் ஆடம்பர ஆட்டத்தை ஆரம்பித்தார்
தற்போது ரன்பீர் கபருடன் அனிமல் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகின்றார். அவ்வப்போது சமூக சேவைகளின் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சினிமா,விளம்பரம்,மாடலிங்,இன்ஸ்டாகிராம் என எப்போதும் பிசியாக இருக்கும் ராஷ்மிகா பில்லியனர் ஆவது உறுதி.