விக்ரமனை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்.. வச்சி செஞ்சு விட்ட ஆண்டவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இரு நபர்கள் இடையே அடிக்கடி சண்டை நிலவி வருகிறது. வார முழுக்க தனலட்சுமி மற்றும் அசீம் இடையே பயங்கர சண்டை நடத்தது.

ஆனால் நேற்று இருவரும் நண்பர்கள் போல பேசி எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து இருந்தனர். இந்நிலையில் விக்ரமன் எப்போதுமே நியாயத்தின் பக்கம் நின்றாலும் மற்ற போட்டியாளர்கள் அவரை சீண்டி வருகிறார்கள். மகேஸ்வரி, மைனா நந்தினி போன்றோர் ஒரு குரூப்பாக விக்ரமனை டார்கெட் செய்கிறார்கள்.

இதில் குறிப்பாக மணிகண்டன் நேற்று டிஆர்பி குறைய காரணமானவர்களை தேர்ந்தெடுக்கும் போது விக்ரமனை தேர்ந்தெடுத்தார். இந்த விளையாட்டை சுலபமாக செய்திருக்கலாம், ஆனால் இதை விக்ரம் மிகவும் கடுமையாக்கி விட்டார் என்பது போல குற்றச்சாட்டுகளை மணிகண்டன் வைத்தார்.

தெரியாததை தெரிஞ்சுக்கிறதுல தப்பில்லையே என மணிகண்டனுக்கு கமலஹாசன் சரியான சவுக்கடி கொடுத்தார். மேலும் சில விஷயங்கள் இப்போது நமக்கு தேவையில்லாமல் இருந்தாலும் பிற்காலத்தில் அது மிகவும் பயனுள்ளதாக அமையக்கூடும் என கூறினார்.

இவ்வாறு தொடர்ந்து ஆண்டவர் மட்டுமின்றி பிக் பாஸ் ரசிகர்களும் தொடர்ந்து விக்ரமனுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். விக்ரமன் ஆரம்பத்தில் விஜய் டிவியின் கதாநாயகனாக ஒரு தொடரில் நடித்திருந்தார். அதன் பின்பு அரசியல், பத்திரிக்கையாளர் என தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களுக்கு ஏதோ ஒன்றை கற்பித்து வருகிறது. துப்புரவு பணியாளராக அவர் நடித்தது அனைவரும் கவனத்தையும் பெற்று ரசிகர்கள் மனதில் உயர்ந்தார். பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை பெற விக்ரமனுக்கு முழு தகுதியும் உண்டு.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →