Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தற்போது கிட்டத்தட்ட மூன்று பிரச்சனைகள் இருக்கிறது. அதில் ஜனனி ஆசைப்பட்டபடி அந்த கம்பெனியை எப்படியாவது மீட்டெடுத்து பிசினஸ் பண்ண வேண்டும். அடுத்ததாக அண்ணன்கள் மேல் ஆதிரை கொடுத்திருக்கும் கம்பிளைன்ட். அடுத்து குணசேகரனுக்கு எதிராக எலக்ஷனில் நிற்கும் ஈஸ்வரி ஜெயிக்க வேண்டும்.
இப்படி இந்த மூன்று பிரச்சனைகளும் ஒரே நேரத்தில் தீர்வு காணும் வழியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கிடையில் ஜனனி அம்மா வேற குணசேகரன் வீட்டில் வந்து தங்கி இருக்கிறார். அடுத்தபடியாக ஆதிரை மற்றும் சாருபாலாவும் குணசேகரன் வீட்டிற்கு போலீசுடன் வருகிறார்கள்.
வந்ததும் ஆதிரை, அம்மா பாசத்தில் பேசப் போகிறார். ஆனால் அதற்கு பதிலாக விசாலாட்சி இடம் இருந்து வெறுப்பு தான் வருகிறது. அடுத்து போலீசார் ஞானம், கதிர் மற்றும் குணசேகரனை விசாரிப்பதற்காக கூப்பிடுகிறார்கள். ஆனால் குணசேகரன் வீட்டில் இல்லாததால் ஞானம் ஓவராக துள்ளுகிறார். இவரை அடக்கும் விதமாக சக்தி ஒழுங்கா வாய மூடிட்டு இருங்க.
இல்லையென்றால் அப்பத்தாவின் விஷயத்தை நான் கிளற ஆரம்பித்தால் நீங்கள் அனைவரும் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவீர்கள் என்று பிளாக்மெயில் பண்ணுகிறார். இதனைக் கேட்ட ஞானம் மற்றும் கதிர் வாய மூடிக்கிட்டு அமைதியாகி விடுகிறார்கள்.
மேலும் சாருபாலாவிற்கு, தன்னுடைய கொழுந்தன் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் குணசேகரன் கதிர் தான் என்ற உண்மை தெரிந்ததிலிருந்து அவர்களுக்கு எப்படியாவது தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கு ஏற்ற மாதிரி ஆதிரையின் வலுக்கட்டாயமாக திருமணத்தை நடத்தி வைத்த விஷயத்தை கையில் எடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க போகிறார்.
இந்த ஒரு விஷயத்தை வைத்து எலக்ஷனிலும் ஈஸ்வரி ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பெண்களுக்கு இந்த மாதிரி ஒரு கொடுமையை குணசேகரன் செய்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர்களுக்கு ஓட்டு போடுவதற்கு யாரும் முன் வர மாட்டார்கள். அந்த விதத்தில் எலக்ஷனில் குணசேகரனை தோற்கடித்து ஈஸ்வரி ஜெய்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.