காவு வாங்கும் இந்தியன் 2, அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்.. வெடித்த சர்ச்சையால் ஷங்கர் எடுத்த முடிவு

Shankar-Indian 2: இந்தியன் 2 படத்தை பார்க்க இன்னும் எத்தனை வருஷம் நாங்க வெயிட் பண்ணனுமுன்னு கமல் ரசிகர்கள் புலம்பாத குறையாக தவித்து வருகின்றனர். நான்கு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இப்படம் அடுத்தடுத்த பிரச்சனைகளின் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

அதிலும் இப்படத்தில் நடித்தவர்கள் முதல் வேலை செய்தவர்கள் வரை அடுத்தடுத்து உயிரிழந்தது பெறும் விமர்சனமாக மாறி இருக்கிறது. அந்த வகையில் நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா, மாரிமுத்து என அடுத்தடுத்த நடிகர்களின் திடீர் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனாலேயே இப்படத்தை சபிக்கப்பட்ட படம் என்றும் காவு வாங்குகிறது என்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் கொரோனா சமயத்தில் நிறுத்தப்பட்ட இப்பட சூட்டிங் அதன் பிறகு ஆரம்பிக்கவே சில வருடங்கள் எடுத்துக் கொண்டது.

அதற்கு இடையில் கமல் ஒரு பக்கம் அரசியல், பிக்பாஸ் என பிஸியானார். அதேபோன்று ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் படத்தை எடுக்க போய்விட்டார். அதன் பிறகு உதயநிதி தலையிட்டு பிரச்சனையை முடித்ததோடு மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் கைகோர்த்து இந்தியன் 2 பட வேலைகளையும் முடுக்கி விட்டார்.

அதைத்தொடர்ந்து ஷங்கர் இரட்டை குதிரையில் சவாரி செய்த நிலையில் இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆகாமல் தான் இருக்கிறது. அதில் இன்று கேம்சேஞ்சர் பட சூட்டிங் நடைபெற இருந்தது. ஆனால் அவர் அதை திடீரென கேன்சல் செய்த அதிர்ச்சி சம்பவமும் நடந்து இருக்கிறது. ஏனென்றால் இந்தியன் 2 கடும் சர்ச்சையாகி வருவதால் ஷங்கர் முதலில் இதை முடித்து விட நினைத்திருக்கிறார்.

அதன்படி தற்போது படத்தை போட்டு பார்த்த அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது. ஏனென்றால் மொத்த படமும் ஆறு மணி நேரம் வருகிறதாம். அதனால் இரண்டு பாகங்களாக படத்தை வெளியிடலாம் என்ற முடிவிலும் அவர் இருக்கிறாராம். எது எப்படியோ படம் ரிலீஸ் ஆனால் சரிதான்.