அழுது புலம்பும் ஆனந்தி, ஆப்சண்ட் ஆன அன்பு, மகேஷ்.. சிங்கப்பெண்ணில் அடுத்த கட்ட கதைக்களம் இதுதான்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் அடுத்த கட்ட கதைகளம் என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களின் இப்போதைய பெரிய எதிர்பார்ப்பு.

இதற்கு முக்கிய காரணம் கடந்த வாரம் முழுக்க ஆனந்தி ஒப்பாரி வைக்கும் எபிசோடுகளை போட்டு அறுத்தது தான்.

சிங்கப்பெண்ணில் அடுத்த கட்ட கதைக்களம்

ஆனந்தி கர்ப்பமாக இருப்பது போன்ற டிராக் சீரியல் ரசிகர்களுக்கு உண்மையிலேயே பிடிக்கவில்லை என்று சொல்லலாம். ஒன்று ஆனந்தியின் மருத்துவ அறிக்கை தவறானது என்பது போல் காட்ட வேண்டும்.

அல்லது மகேஷ் தான் இந்த கர்ப்பத்திற்கு காரணம் என ஆனந்திக்கு தெரிய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பு.

ஆனால் இந்த வார கதை ரசிகர்களுக்கு ஒரு பெரிய சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனந்தியின் அப்பா அம்மா ஹாஸ்டலுக்கு வருவது போல் காட்டுவதும் மீண்டும் ஆனந்தியால தொடங்குவதும் என அழுகாட்சி காட்சிகள் தான் அதிகம் நிறைந்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் சம்பந்தமில்லாமல் வேலுவை உள்ளே வரவைத்து அழகப்பனை கோபப்பட வைப்பது எல்லாம் இப்போதைக்கு தேவையில்லாத கண்டன்டு தான்.

இந்த அழுகாட்சி காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது மித்ரா என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. மித்ராவின் நடவடிக்கைகளால் ஆனந்திக்கு அவள் மீது சந்தேகம் வந்து இதற்கெல்லாம் யார் காரணம் என அவள் கண்டுபிடிப்பது தான் அடுத்த கட்ட கதைக்களம். இதை இயக்குனர் எப்போ ஆரம்பிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.