தேஞ்சு போன சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. கிளைமேக்ஸ் காட்சியுடன் 2 சீரியல்

Sun Tv Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சமீப காலமாக டல் அடித்து வருகிறது. இதுவரை அதிகப் புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பெற்றிருந்தாலும் கடந்த சில வாரங்களாக கம்மியான புள்ளிகளை பெற்று சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அதிரடியாக சேனல் திறப்பிலிருந்து வரிசையில் இருக்கும் புத்தம் புது சீரியல்களை ஒவ்வொன்றாக இறக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.

அந்த வகையில் மதியம் ஒளிபரப்பாகி வரும் புன்னகை பூவே சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் முடியப்போகிறது. இந்த சீரியலை தொடர்ந்து அடுத்து முடிவுக்கு வரப்போகும் சீரியல் லட்சுமி. இந்த சீரியலில் ஸ்ருதி ராஜ் முன்னணி ஹீரோயினாக நடித்த வருகிறார். பொதுவாக இவர் நடிக்கும் எல்லா சீரியலுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிடும்.

அப்படித்தான் இவர் நடித்த தென்றல் சீரியலில் ஆரம்பித்து ஆபீஸ், தாலாட்டு மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலும் மக்களை கவர்ந்திருக்கிறது. ஆனாலும் இந்த சீரியலில் புதுசாக கதை சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லாததால் சண்டை சச்சரவுடன் இருக்கும் லட்சுமி குடும்பத்தை ஒன்றாக இணைக்கும் வகையில் கதை அனைத்தும் திருப்புமுனையாக மாறப்போகிறது.

அந்த வகையில் இந்த சீரியலை முடித்துவிட்டு இதற்கு பதிலாக வேறொரு சீரியலை கொண்டு வருவதாக தகவல் வெளியாயிருக்கிறது. மேலும் இதற்கு பதிலாக வினோதினி மற்றும் பராசக்தி போன்ற இரண்டு சீரியல்கள் வரிசையில் இருக்கிறது.