பூவாக இருந்து புயலாக மாறிய கதாநாயகி.. சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலின் அதிரடி ட்விஸ்ட்!

சன் டிவியில் புதுவிதமான கதை களங்களுடன் பல்வேறு நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மட்டுமே பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் தந்தை, மகள் இருவருக்கும் இடையே நடக்கக்கூடிய பாசப் போராட்டத்தை மிகவும் அழகாக கண்ணான கண்ணே சீரியல் எடுத்துக் கூறுகிறது.

கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகி மீராவுக்கும், கதாநாயகன் யுவராஜுக்கும் அண்மையிலே திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து தனது கணவரையும் தனது தந்தை தவறாக நடத்துவதைக் கண்டித்து கதாநாயகி மீரா கொதித்து எழுகிறார்.

மீரா தனது தந்தை தன்னை ஒதுக்கி வைப்பது போல தனது கணவரிடமும் தவறாக நடந்து கொள்ளுவதை எதிர்த்து, தென்றல் போன்ற குணம் கொண்ட கதாநாயகி மீரா புயலாக உருமாறி இருக்கிறாள்.

தனது தந்தையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அதிரடியான சவாலை முன்வைக்கிறாள். தன்னை அவமானப்படுத்தியது போலவே தனது கணவரையும் அவமானப்படுத்தும் தனது தந்தைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக, தந்தையை எதிர்த்து நிற்கத் துணிந்த கதாநாயகி மீராவின் இந்த திடீர் மாற்றம்  சீரியல் ரசிகர்களுக்கு பிரமிப்பூட்டுகிறது.

எனவே இனிவரும் நாட்களில் மீரா தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று அவருடைய மாற்றத்திற்கு ரசிகர்கள் தரப்பில் பெரிதளவு எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் கணவரை தண்டிக்க நினைக்கும் தந்தையிடம் புயலாக மாறுகின்ற கதாநாயகி மீரா, கண்ணான கண்ணேவில் நிகழக்கூடிய இந்த புது டுவிஸ்டால் இந்நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.