அவசரமாக முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்.. புதுசாக வரப்போகும் வினோதினி சீரியல்

Sun Tv New Serial: சமீப காலமாக சீரியல்கள் கொஞ்சம் டல் அடித்து வருகிறது. இதற்கு காரணம் பழைய சீரியல்களை வைத்து ஓட்டுவதால் மக்களுக்கு போரடித்து விட்டது, அதனால் பெருசாக எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த விஷயத்தை சரியாக புரிந்து கொண்ட சன் டிவி, டல்லாக இருக்கும் சீரியலை ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் புன்னகை பூவே என்ற சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. இந்த சீரியல் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் புள்ளிகளை பெறவில்லை என்பதால் அவசரமாக முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலுக்கான கிளைமாக்ஸ் காட்சிகள் இன்று எடுத்து விட்டாச்சு. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நாடகத்தை முடித்துவிட்டு அதற்கு பதிலாக புத்தம் புது சீரியலை கொண்டு வரப் போகிறார்கள்.
அப்படி வரப்போகும் சீரியல் என்னவென்றால் வினோதினி. இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் பூவே செம்பூவே என்று வைக்கப்பட்டது.

ஆனால் தற்போது வினோதினி என்ற டைட்டிலாக மாற்றி இருக்கிறார்கள். இதில் இணையப் போகும் நடிகர்கள் யார் என்றால் ஜீ தமிழ் சீரியலில் கார்த்திகை தீபம் மூலம் பிரபலமான ஆர்த்திகா கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக தெய்வமகள் மற்றும் தாலாட்டு போன்ற சீரியலில் நடித்து ஹிட் கொடுத்த ஹீரோ கிருஷ்ணா தான் கமிட் ஆகி இருக்கிறார்.

இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கப் போகும் சீரியல் தான் வினோதினி. இந்த சீரியல் வருகிற மே 26 ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாக போகிறது. ஆனால் இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாக வேண்டும் என்பதால் தற்போது பிரைம் டைமிங்கில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியலை மதியத்திற்கு மாற்றி விட்டு புதுசாக வரப்போகும் சீரியலை பிரைம் டைமிங் கொண்டு வருவதாக தகவல் வெளியாயிருக்கிறது.