சிங்கப்பெண்ணில் அன்பு, மகேஷ் அவுட்.. ஆனந்தி கழுத்தில் தாலியை கட்டிய சுயம்புலிங்கம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய பிரமோ வெளியாகி இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத திருப்பமாக கோகிலாவின் திருமணத்தில் சுயம்புலிங்கத்தால் ஏகப்பட்ட பிரச்சனை வந்தது.

ஆனந்தியின் அனுமதியே இல்லாமல் கோகிலா திருமணத்தின்போது ஆனந்தி கழுத்தில் தாலி கட்டுவது என அன்பு முடிவெடுத்திருக்கிறான். ஆனால் அன்புவுக்கு முன்னாடியே சுயம்புலிங்கம் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டி விடுவான் போல.

தாலியை கட்டிய சுயம்புலிங்கம்!

கோகிலாவை மண்டபத்தில் இருந்து கடத்தும் சுயம்புலிங்கம் ஆனந்தியை அவன் சொன்ன இடத்திற்கு வருமாறு மிரட்டுகிறான். ஆனந்தியும் வழக்கம் போல யாரிடமும் சொல்லாமல் சுயம்புலிங்கம் வர சொல்லும் இடத்திற்கு போகிறாள்.

அங்கு ஆனந்தியை மிரட்டி சுயம்புலிங்கம் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி கழுத்தில் சுயம்புலிங்கம் தாலியை எடுத்து வைப்பது போல் காட்டப்பட்டு விட்டது.

கண்டிப்பாக சுயம்புலிங்கம் ஆனந்தியை திருமணம் செய்ய வாய்ப்பில்லை. அந்த இடத்திற்கு அன்பு தான் வந்து எல்லாவற்றையும் தடுக்க போகிறான். சுயம்புலிங்கத்தை அடக்கிவிட்டு அதே இடத்தில் ஆனந்தியின் கழுத்தில் அன்பு தாலி கட்டுகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.