தமிழும் சரஸ்வதியும் சீரியல் அர்ஜுன் இந்த நடிகரின் தம்பியா?. அட, ஆமா முகசாயல் அப்படியே இருக்குதே!

Tamizhum Saraswathium serial: சின்னத்திரையில் இருந்து பெரிய பிரேக் எடுத்துக் கொண்ட பிரபல நடிகர் தீபக்கை மீண்டும் சீரியலுக்குள் கொண்டு வந்து பெருமை தமிழும் சரஸ்வதியும் தொடருக்குத்தான் உண்டு. தென்றல் சீரியலில் ஏற்கனவே இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்ததால், இவர் மீண்டும் நடிக்க தொடங்கிய தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலில் தீபக்கிற்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கிறார்.

பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் ஆக போராடும் வாத்தியாரின் மகள், அவரை காதலிக்கும் கோதை இண்டஸ்ட்ரீஸ் முதலாளியின் மூத்த மகன் என இந்த சீரியல் ஆரம்பத்தில் மிகப்பெரிய விறுவிறுப்புடன் சென்றது. டிகிரி முடித்திருப்பதாக பொய் சொல்லி திருமணம் செய்து, அதன் பின்னர் ஏற்பட்ட சர்ச்சைகளை சமாளித்த சரஸ்வதி இத்தனை வருடங்களாக தொடர்ந்து அந்த வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வருகிறார்.

ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த சீரியல் நாளடைவில் ஒரே மாதிரியான கதை அம்சத்தில் போய்க் கொண்டிருப்பதால் சலிப்பு தட்டும் அளவுக்கு போய்விட்டது. இந்த சீரியலில் முக்கியமான கேரக்டராக நுழைந்தவர் தான் அர்ஜுன். தமிழின் தங்கச்சி ராகினியை உயிருக்கு உயிராக காதலித்து, திருமணம் செய்யும் வரை இருந்த அர்ஜுன் வேற, ராகினியின் கழுத்தில் தாலியை கட்டிய பிறகு தன்னுடைய உண்மையான முகத்தை காட்டிய அர்ஜுன் வேற.

இந்த நாடகத்திலிருந்த அர்ஜுனின் மிகப்பெரிய டிவிஸ்ட் தான் ஒரு காலகட்டத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் கொடி கட்டி பறந்ததற்கு காரணம். தொடர்ந்து அர்ஜுன் கோதை குடும்பத்திற்கு பிரச்சினை ஏற்படுத்துவது போலவும், அதை தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இணைந்து முறியடிப்பது போலவும் காட்சி அமைப்பு வந்து கொண்டிருந்ததால் நாடகம் அவ்வளவு விறுவிறுப்பாக செல்லவில்லை.

இந்த நாடகத்தின் வெற்றிக்கு அர்ஜுனனின் நடிப்பு ரொம்பவே உதவி செய்து இருக்கிறது. இந்த அர்ஜுன் கேரக்டரில் நடிப்பவர் பிரபல நடிகரின் தம்பி என சமூக வலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் பரவியது. அர்ஜுனனின் உண்மையான பெயர் ராயன். இவர் மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் நடித்த நடிகர் அர்ஜுன் தாசின் தம்பி என சில மாதங்களாக சொல்லப்பட்டு வந்தது. இதற்கு காரணம் இவர்கள் இருவரது முக சாயலும் ஒரே மாதிரி இருப்பது தான்.

இப்போது இந்த வியூகங்களுக்கு சின்னத்திரை நடிகர் ராயன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இருவரது முகசாயலும் ஒரே மாதிரி இருப்பதால் இது போன்ற வியூகம் எழுந்து இருக்கிறது, உண்மையில் நான் அர்ஜுன் தாசின் தம்பி கிடையாது என ராயன் தெளிவு படுத்தி இருக்கிறார். இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர். MR.Teen India என்ற போட்டியில் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனவர் மாடலிங் துறையில் இருந்த அவருக்குத்தான் தமிழும் சரஸ்வதி சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.