கேப்டனுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த நடிகை.. மொத்த சொத்தும் பறிபோன சோகம்

தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் கேப்டன் விஜயகாந்த். தன்னை தேடி வருபவர்களுக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் பல உதவிகளை செய்யும் இவரை சினிமாவில் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

இவரால் இன்று சினிமாவில் நல்ல நிலைமையில் இருக்கும் நடிகர்கள் ஏராளம் உண்டு. ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் இவரால் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளார் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. ஆனாலும் அதுதான் உண்மை. விஜயகாந்த் உடன் காவிய தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் நடிகை பானுப்பிரியா.

80 காலகட்ட சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவருக்கு விஜயகாந்த் என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். அதனாலேயே அவரை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு விஜயகாந்தும் சம்மதம் கூறி இருக்கிறார்.

அதன் பிறகு பானுப்ரியா பல கோடிகளை கொட்டி அந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமலேயே போய்விட்டது. இதனால் பானுப்ரியா மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்.

அந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக இவர் தன்னுடைய சொத்து முழுவதையும் விற்றுள்ளார். அதன் மூலம் வந்த பணத்தை வைத்து தான் அவர் படம் தயாரிப்பதற்காக வாங்கிய அத்தனை கடனையும் அடைத்திருக்கிறார். அதன் பிறகு பெரிய திரையில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் இவர் சின்னத்திரையிலும் நடித்தார்.

தற்போது அம்மா கேரக்டர்களில் நடித்து வரும் பானுப்ரியா இப்படி ஒரு நஷ்டத்தை சந்தித்தது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது. சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்கள் படம் தயாரிக்க முன் வருவது ஒன்றும் புதிதல்ல.

சாவித்திரி முதல் நயன்தாரா வரை பலரும் இந்த முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் தான் அது வெற்றியாக மாறி இருக்கிறது. இவ்வாறு படம் தயாரிக்க ஆசைப்பட்டு நஷ்டம் அடைந்த பானுப்பிரியா அதன் பிறகு இப்படி ஒரு முயற்சியில் இறங்கவில்லை.