பொண்டாட்டியின் எக்ஸ் காதலன் என தெரிந்ததும் குணசேகரனுக்கு வந்த நெஞ்சுவலி.. ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட் வைக்கும் எதிர்நீச்சல்

Ethir Neechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இதற்கு காரணம் யாரும் சற்றும் கணிக்க முடியாத கதைகளைத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவதால் சுவாரசியமாக இருக்கிறது. நாளுக்கு நாள் ட்வ்ஸ்டுகக்கு மேல் ட்விஸ்டாக இயக்குனர் கதையை நகர்த்தி சென்று வருகிறார்.

அதாவது இப்போது ஜீவானந்தம் என்ட்ரி குணசேகரன் குடும்பத்திற்கு ஆட்டம் காண வைத்துள்ளது. குணசேகரன் ஒரு பக்கம், ஜனனி ஒரு பக்கம் என யார் இந்த ஜீவானந்தம் என்று தெரியாமல் கதிகலங்கி நிற்கிறார்கள். இந்நிலையில் ஜனனி ஜீவானந்தத்தின் தற்போதைய புகைப்படத்தை எடுத்து வந்து வீட்டில் உள்ள மருமகள்களிடம் காண்பிக்கிறார்.

எல்லோருமே இவர் யாராக இருக்கும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது குணசேகரனுக்கு பேர் இடியாக ஜீவானந்தம் சொத்து மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கையிலும் குழப்பத்தை ஏற்படுத்த இருக்கிறார். அதாவது குணசேகரனின் மனைவி ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் ஜீவானந்தம்.

இருவரும் ஒன்றாகவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை படித்திருக்கிறார்கள். அப்போது இவர்கள் இருவருக்குமே காதல் மலர்ந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் பிரிந்துள்ளனர். அதற்கான பிளாஷ்பேக் காட்சிகள் இனிவரும் எதிர்நீச்சல் எபிசோடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஏற்கனவே சொத்துக்காக குணசேகரன் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் ஜீவானந்தம் என்று தெரிய வந்தால் அவருக்கு நெஞ்சு வலியை வந்துவிடும். இதன் மூலம் ஈஸ்வரிக்கு நிறைய பிரச்சனைகள் வர காத்திருக்கிறது. மேலும் ஜீவானந்ததிற்கும் இந்த சொத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதும் வெளியாக இருக்கிறது.

இப்போது ஈஸ்வரிக்கு ஜீவானந்தத்தின் புகைப்படத்தை பார்த்தவுடன் யார் என்பது தெரியவில்லை. ஏனென்றால் இப்போது அவரின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இவரால் கண்டறிய முடியவில்லை. ஆகையால் வரும் எபிசோடுகளில் இவர்கள் இருவரும் ஒன்றாக சந்திக்கும்படியான காட்சிகள் அரங்கேற இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →