Sun Tv Serial: பொதுவாக சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால் சின்னத்திரைக்குள் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக திறமையை காட்டி அடுத்தடுத்த வாய்ப்புகளை பெறுவது வழக்கம் தான். அப்படித்தான் சீரியல் மூலம் நடித்து பலரும் முன்னேறி வெள்ளிதிரையில் ஜொலித்து வருகிறார்கள்.
அதுபோலவே சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் நடிக்கும் கதாநாயகிக்கு முதல் முறையாக வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது ஆனந்தியின் நெருங்கிய தோழியாக இருக்கும் காயத்ரி என்கிற யோகலட்சுமி சீரியலில் சாப்பாடு டெலிவரி பண்ணும் கேரக்டரில் நடித்து வருகிறார்.
அப்படிப்பட்ட இவருக்கு வெப் சீரியஸ் மற்றும் போட்டோ சூட் பண்ணுவதில் அதிக ஆர்வம் உண்டு. அத்துடன் இவருடைய அண்ணன் வெள்ளி திரையில் தொழில்நுட்ப கலைஞராக இருப்பதால் அவர் மூலம் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் சசி மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் பேர் வாங்கிக் கொண்டு வரும் டூரிஸ்ட் பேமிலி ஒரு ஹிட் படமாக வெற்றி பெற்று வருகிறது. இந்த படத்தில் குரல் என்ற கேரக்டரில் சசி மகனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு யோகலட்சுமிக்கு கிடைத்திருக்கிறது.
கிடைத்த முதல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு நடிப்பை பிரமாதமாக கொடுத்து அனைவரிடமும் பாராட்டை பெற்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்து படங்களில் சில வாய்ப்புகள் வருவதாக காயத்ரி என்னும் யோகலட்சுமி இன்டர்வியூ கொடுத்து வருகிறார். இவருடைய நடிப்புக்கும் திறமைக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.