கோலிவுட் பெரிதும் எதிர்பார்க்கும் மற்ற மொழி 5 படங்கள்.. பல வருடமாக இழுத்தடிக்கும் அட்லீ

Kollywood Fans Waiting For 5 Other Language Films: பொதுவாக தமிழ் ரசிகர்கள் இங்குள்ள ஹீரோக்களின் படங்கள் ரிலீஸை பெரிதும் எதிர்பார்ப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி படங்கள் மீதும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். அவ்வாறு கோலிவுட் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மற்ற மொழி ஐந்து படங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

புஷ்பா 2 : அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் எல்லா மொழி ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது. அதிலும் இந்த படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் பட்டி தொட்டி எங்கும் ட்ரெண்டானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்து கிடக்கிறார்கள்.

கே ஜி எஃப் 3 : கே ஜி எஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதுவும் தமிழ் சினிமாவில் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் கே ஜி எஃப் மோதியது. அப்போதும் இந்த படம் தான் வசூல் சாதனை படைத்தது. ஆகையால் தமிழ் ரசிகர்கள் கே ஜி எஃப் 3 படத்திற்காக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

கேம் சேஞ்சர் : ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தில் ராஜு தயாரித்து வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸுக்காக கோலிவுட் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

சலார் : பிரபாஸின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது பிரபாஸின் சலார் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இவரின் மற்றொரு படமான ப்ராஜெக்ட் கே மீதும் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கிறது. காரணம் அந்த படத்தில் கமல் இணைந்துள்ளார்.

ஜவான் : அட்லீ முதல் முறையாக பாலிவுட்டில் களம் காணும் படம் ஜவான். ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கிடக்கும் நிலையில் பல வருடமாக அட்லீ இழுத்தடித்து வருகிறார்.