18 வருடங்களுக்குப் பின் இரண்டாம் பாகமாக வரும் சீரியல்.. டிஆர்பி-யை பிடிக்க சன் டிவி ஆடப்போகும் ஆட்டம்

The second part of the serial after 18 years: படங்களை விட சீரியலுக்கு மட்டும் தான் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் தாய்மார்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் கட்டிப்போட்டு பார்க்க வைப்பது சீரியல்தான். இன்னும் சொல்லப் போனால் பெண்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் மற்றும் அவர்களின் பொழுதுபோக்காக இருப்பதும் சீரியல்தான். அதனாலேயே ஒவ்வொரு சேனலும் அவர்களுடைய டிஆர்பியை அதிகரிப்பதற்காக தொடர்ந்து சீரியல்களை கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்களின் மனதில் சிம்ம சொப்பனமாக உயரத்தில் இருப்பது சன் டிவி தான். இதில் வரும் நாடகங்களுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அதிலும் இந்த காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தினால் சீரியலை பார்க்க முடியவில்லை என்றால் ஒவ்வொருவரும் மொபைல் மூலம் அந்த நாடகத்தை பார்த்த பின்பு தான் தூங்கவே செய்கிறார்கள்.

அந்த அளவிற்கு குடும்பப் பெண்களை ஆக்கிரமித்து விட்டது. இது இப்பொழுது மட்டுமல்ல 18 வருடங்களுக்கு முன் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் இருந்து தொடர்ந்து வருகிறது. இதற்கு முழுமூச்சாக இருந்து உயிரோட்டமாக கொடுத்தது சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியல் தான். 2002 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2005 ஆம் வரை சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஓடியது.

Also read: குணசேகரனை அடக்கி ஆளும் தூக்குதுரை.. கைக்கு எட்டினதை தவிர விட்டு சொதப்பிய மருமகள்கள்

இப்பொழுது கூட “அம்மி அம்மி மிதித்து அருந்ததியை பார்த்து” பாடலைக் கேட்டால் அனைவருக்கும் பழைய ஞாபகங்கள் வந்துவிடும். இன்னும் சொல்ல போனால் மறுபடியும் நாடகத்தை பார்க்க முடியாதா என்று மக்கள் ஏங்கவும் ஆரம்பித்து விட்டார்கள். அதனால் என்னமோ அவர்கள் மனதை குளிர வைக்கும் விதமாக மெட்டிஒலி இரண்டாம் பாகம் கூடிய விரைவில் வர இருக்கிறது.

இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சேத்தன் கமிட் ஆகியிருக்கிறார். இவர் ஏற்கனவே முதல் பாகத்தில் மாணிக்கம் என்ற கேரக்டரில் அம்மா பிள்ளையாக நடித்திருக்கிறார். அதே மாதிரி இரண்டாம் பாகத்திலும் இவருடைய கேரக்டர் தொடர போகிறது. இவரை தொடர்ந்து நீலிமா ராணி நடிக்கப் போகிறார். அடுத்ததாக இன்னும் சில கதாபாத்திரங்களை நடிக்க வைப்பதற்கு பழைய ஆர்டிஸ்ட்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அத்துடன் இன்னும் இதில் இளம் ஆர்டிஸ்ட்கள் தேவைப்படுகிறது என்பதால் அதற்கான தேர்வையும் நடத்தி வருகிறார்கள். இன்னும் கூடிய விரைவில் மறுபடியும் மக்களை குடும்பத்துடன் பார்க்க வைப்பதற்காக சன் டிவி தற்போது இந்த ஏற்பாடு பண்ணி இருக்கிறது. அப்படி மட்டும் மெட்டிஒலி இரண்டாம் பாகம் வந்துவிட்டால் இதை வைத்தே சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்து விடலாம் என்று காய் நகர்த்துகிறார்கள்.

Also read: முத்துவின் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாடும் மீனா.. வயித்தெரிச்சலில் கொந்தளிக்கும் விஜயா