100 நாட்களுக்குள் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்த சன் டிவி சீரியல்.. நெருங்க முடியாமல் தவிக்கும் எதிர்நீச்சல்

Sun Tv Serial crossed 100 Days: பொதுவாக சன் டிவி சீரியலுக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதுமே ஏகபோக வரவேற்பு இருக்கும். அதனால் தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்து ஒய்யாரத்தில் இருக்கிறது. என்ன தான் மற்ற சேனல்கள் போட்டி போட்டு நாடகத்தை ஒளிபரப்பாக்கி வந்தாலும் சன் டிவி சீரியலுக்கு என்று தனித்துவம் இருக்கும்.

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பிரைம் டைமில் வந்த சிங்கப்பெண்ணே சீரியல் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டி இருக்கிறது. ஆரம்பத்தில் டிஆர்பி யில் மூன்றாவது இடத்தை பிடித்த இந்த சீரியல் போகப் போக மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. அதன் பின் சிங்கப்பெண்ணே சீரியல் முதல் இடத்திற்கு வந்து எதிர்நீச்சல் மற்றும் கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி விட்டது.

இந்த நாடகத்தை பிரபாஸ் முத்தையா எழுதி, தனுஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். மேலும் இந்த சீரியலை சன் டிவி மற்றும் மிராக்கள் மீடியா இணைந்து தயாரிக்கிறார்கள். அத்துடன் இந்த நாடகத்தின் கதையானது முக்கோண காதலில் மாட்டிக் கொண்டு இருக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகர்ந்து வருகிறது. இதில் மனுஷா மகேஷ் என்பவர் ஆனந்தி கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Also read: முத்துவின் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாடும் மீனா.. வயித்தெரிச்சலில் கொந்தளிக்கும் விஜயா

அமல்ஜித் என்ற நடிகர் அன்பரசன் கதாபாத்திரத்திலும், தர்ஷன் கௌடா என்ற நடிகர் மகேஷ் என்கிற கதாபாத்திரத்திலும் இரண்டு ஹீரோயின்களை மையப்படுத்தி இருக்கிறது. இவர்களை தவிர யோகலட்சுமி, வீஜே பவித்ரா மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நாடகம் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் வயது ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து வருகிறது.

அதனாலயே தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. எப்படியாவது இந்த இடத்தை பிடித்து விட வேண்டும் என்று போராடிவரும் எதிர்நீச்சல் சீரியலால் கிட்ட கூட நெருங்க முடியாமல் தவிக்கிறார்கள். தற்போது 100 நாட்களை வெற்றிகரமாக தாண்டியதால் மொத்த டீமும் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். ரசிகர்களும் இந்த சீரியலுக்கு அவர்கள் பக்கத்தில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: மீனா கொடுத்த ஐடியாவால் ஒன்று சேரப்போக்கும் ராஜி கதிர்.. பாக்யா தலைமையில் நடக்கப்போகும் திருமணம்