Sun Tv Serial 500 Episode Celebration: சன் டிவியில் கிட்டத்தட்ட 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் காலையில் 9, மாலையில் 9 என்று சீரியல்கள் பிரித்து மக்களை எண்டெர்டைன்மென்ட் பண்ணிக் கொண்டு வருகிறது. ஆனால் என்னதான் இருந்தாலும் காலையில் ஒளிபரப்பாகி வருகின்ற நாடகத்தை விட சாயங்காலம் வரும் நாடகத்திற்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அப்படி வருகின்ற ஒரு நாடகம் ரசிகர்களின் ஆதரவுடன் தற்போது 500 எபிசோடை தாண்டிவிட்டது. இதுல எத்தனையோ சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புத்தம் புது நாடகங்களை ஒளிபரப்பாகி வந்தாலும், இந்த நாடகம் தான் அனைத்து சீரியலுக்கும் சிம்ம சொப்பனமாக ஒய்யாரத்தில் இருக்கிறது.
அதாவது பெண்களின் அடிமைத்தனத்தை வேரோடு வெட்டி எறிந்து அவர்கள் சொந்த காலில் சுதந்திரமாக போராட வேண்டும் என்ற கருத்தை முன்னுறுத்தி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல்தான். கடந்த வருடம் இந்த நாடகம் துவங்கிய போது இதற்கு எதிர் கருத்தாக பல விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
முக்கியமாக இந்த மாதிரி ஒரு நாடகத்தை காட்டி குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று இயக்குனருக்கு தபால் மூலம் பல மிரட்டல்கள் வந்ததாக இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனாலும் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தற்போது 500 எபிசோடு வெற்றிகரமாக கடந்திருக்கிறது.
அந்த வகையில் இப்பொழுது இந்த நாடகத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்த்து வருகிறார்கள். மேலும் இதில் என்னதான் கதை மக்களுக்கு பிடித்து போயிருந்தாலும், இன்னொரு பக்கம் நடிக்கும் கதாபாத்திரங்கள் அவர்களுடைய எதார்த்தமான நடிப்பை கொடுப்பதனால் இந்த நாடகத்திற்கு இன்னும் மிகப்பெரிய ஹைலட்டாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் இந்த நாடகத்தில் உள்ள மொத்த டீமும் அவர்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் பார்க்கும் பொழுது இந்த ஒரு தருணத்திற்காக தான் இவ்வளவு தூரம் நாங்கள் கஷ்டப்பட்டோம். அதற்கு ஏற்ற பலன் எங்களுக்கு கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.
எதிர்நீச்சல் மொத்த டீமும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம்
