Biggboss 7 Voting: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார். டைட்டில் வின்னர் என்ற கனவுடன் இருந்த அவருடைய வெளியேற்றத்தை தொடர்ந்து இந்த வாரம் ஏழு பேர் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர்.
அதில் தினேஷ் 23 சதவீத ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் இருக்கின்றனர். அதற்கு அடுத்து ரவீனா, நிக்சன், மாயா ஆகியோர் இருக்கின்றனர்.
இதில் மாயா எட்டு சதவீத ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார். இதிலிருந்து பிக்பாஸ் ரசிகர்கள் இவரை வெளியேற்ற எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் விஜய் டிவியும் கமலும் இருக்கும் வரை அப்படி ஒரு சம்பவம் நடக்கவே நடக்காது.
அதனால் இந்த வாரம் ரவீனா அல்லது நிக்சன் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த வார ஓட்டுகள் அனைத்தும் சிதறிய நிலையில் தான் இருக்கின்றன. ஏனென்றால் அர்ச்சனா, விசித்ரா ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறும் போது குறைந்தபட்சம் 40 சதவீத வாக்குகள் அவர்கள் கையில் இருக்கும்.

ஆனால் இந்த முறை அனைவருக்கும் கலவையான ஓட்டுகள் தான் கிடைத்திருக்கிறது. அதனாலேயே இந்த வார எலிமினேஷன் யார் என்பது பெரும் ட்விஸ்ட் ஆக இருக்கிறது. ஆனால் கடைசி இடத்தில் இருக்கும் மாயா வெளியேறுவதற்கு வாய்ப்பில்லை என்பது மட்டும் 100% உறுதியாக தெரிகிறது.