இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்களின் லிஸ்ட்..மொத்த ரேட்டிங்கையும் வாரி சுருட்டிய ஒரே சேனல்

This Week Top 6 Serials TRP Rating List: ஒவ்வொரு வாரமும் வெளியாகும் சீரியல் டிஆர்பி ரேட்டிங் இணையத்தை பரபரப்பாக்கும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி-யில் மொத்த ரேட்டிங்கையும் ஒரே சேனல் தான் வாரி சுருட்டிக் கொண்டது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற மூன்று சேனல்களுக்கு இடையே தான் டிஆர்பி-யில் கடும் போட்டி நிலவும்.

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலுக்கு 10-வது இடமும், விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் 9-வது இடத்திலும், 8-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், 7-வது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியலும் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக 6-வது இடத்தில் சன் டிவியின் இனியா சீரியல் இருக்கிறது. கொஞ்ச நாட்களாக இனியாவிடம் பாசமான கணவராக இருந்த விக்ரம், இப்போது பழைய நினைவுகள் திரும்பிய நிலையில் இனியாவை டார்ச்சர் செய்யும் ரக்கட் பாயாக மாறிவிட்டார்.

Also Read: பாக்கியா தலையில் விழுந்த பெரிய இடி.. ஆனந்த கூத்தாடும் கோபி, காலை வாரி விடும் மாமி

டாப் சீரியல் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்

இதைத் தொடர்ந்து 5-வது இடம் கலெக்டராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரிக்கு கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்திலும் நான்கு மருமகள்கள் தங்களது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சலுக்கு 4-வது இடமும் கிடைத்துள்ளது.

3-வது இடத்தில் வானத்தைப்போல சீரியலும் உள்ளது. இதில் சின்ராசு தன்னுடைய தங்கையின் வாழ்க்கைக்காக படும் பாடு பார்ப்பவரை கலங்க வைக்கிறது. 2-வது இடம் கயல் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இப்போதுதான் எழில்- கயல் இருவரின் ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது. விரைவில் இவர்களை காதலர்களாக பார்க்க போகிறோம்

முதலிடத்தில் சிங்க பெண்ணே சீரியல் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட புத்தம் புது சீரியல் ஆன இந்த சீரியல் கயல், எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளிவிட்டு இப்போது முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டது. இதில் சில்வண்டு போல் இருக்கும் ஆனந்தி அவ்வப்போது சிங்கம் போல் சீறிப் பாய்வது சீரியலை மேலும் சுவாரசியமாக்குகிறது.

Also Read: குணசேகரனை கதற விடுவதற்கு களம் இறங்கிய சாருபாலா.. புருஷன் மூஞ்சியில் கறியை பூசிய ஈஸ்வரி