இந்த வாரம் கமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் போட்டியாளர்.. மயிரிழையில் உயிர் தப்பிய மகேஸ்வரி

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார். அந்த வகையில் கடந்த வாரம் செரினா குறைவான ஓட்டுகளை பெற்று வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் விதிமுறைகளை மீறியது மற்றும் அவருடைய நடவடிக்கைகள் போன்ற காரணத்தினால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் அசீம், விக்ரமன், ஆயிஷா, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, ஏடிகே ஆகியோர் இடம் பெற்றனர்.

அதில் வழக்கம் போல அசீம் மற்றும் விக்ரமன் இருவருக்கும் அதிகபட்ச ஓட்டுகள் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த வாரம் முதல் இடத்தில் இருந்த விக்ரமன் இந்த வாரம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த வகையில் அசீம் அதிக ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். கமலின் அறிவுரைக்குப் பிறகு தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொண்ட இவருக்கு தற்போது அதிக ஆதரவு கிடைத்து வருகிறது.

இவர்களைத் தொடர்ந்து ஆயிஷா, மகேஸ்வரி, தனலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். கடைசி இரண்டு இடத்தில் ராம் மற்றும் ஏடிகே ஆகியோர் இருக்கின்றனர். இதில் ராமுக்கு மிக குறைவான ஓட்டுகள் கிடைத்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் அமைதியாக வலம் வரும் போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.

இவர் வீட்டுக்குள் இருக்கிறாரா என்பதே சில சமயம் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தெரியாது. அந்த அளவுக்கு இவர் எந்நேரமும் தூக்கத்திலேயே இருக்கிறார். இதைப் பற்றி கடந்த வாரம் பேசிய கமல் இனி இதுபோன்று வேலை செய்யாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கக் கூடாது என்று கடுமையாக கண்டித்தார். அது மட்டுமல்லாமல் இந்த வாரம் ராம் பாத்திரம் விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உடல் நிலையை காரணம் காட்டி வேலை செய்வதிலிருந்து எஸ்கேப் ஆன ராம் கமலின் கட்டளையால் இந்த வாரம் அவ்வப்போது வேலைகள் செய்து வந்தார். இருப்பினும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பது ரசிகர்களுக்கு பிடிக்காத காரணத்தால் தற்போது குறைந்தபட்ச ஓட்டுகளே இவருக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் மிக்சர் சாப்பிடும் போட்டியாளராக இருந்த ராம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →