சிங்கப்பெண்ணில் ஆட்டத்தை ஆரம்பித்த துளசி, வளைந்து கொடுக்கும் அன்பு.. ஆனந்தியின் பரிதாப நிலை!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. சரியான நேரத்தில் துளசி கேரக்டரை உள்ளே கொண்டு வந்தனர் ரசிகர்களின் பிரஷரை எதிர வைத்திருக்கிறார் இயக்குனர்.

இவ்வளவு நாட்களாக அன்புவை சுற்ற வைத்து வேடிக்கை பார்த்த ஆனந்திக்கு இப்போது ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. அன்புடன் எனக்கு திருமணம் நடக்கும் என்பதை மறந்து விடுங்கள் என ஆனந்தி அன்புவின் அம்மா லலிதாவிடம் சொல்லி இருந்தாள்.

ஆனந்தியின் பரிதாப நிலை!

அதே நேரத்தில் துளசி வந்ததும் அப்பாவின் ஆசையாவது நிறைவேறட்டும் என லலிதா அன்புவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். துளசியும் ஆனந்தி, அன்பை விட்டு விலக ஆரம்பித்திருக்கும் நேரத்தில் தன்னுடைய அதிக காதலை அவன் மீது காட்டுகிறாள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு ஆனந்தி மீது தன்னுடைய அதீத கோபத்தை காட்டுகிறான். ஆனந்தி எதற்காக தன்னை வெறுக்கிறாள் என்பதுதான் அன்புவின் உச்சகட்ட கோபம்.

அன்பு ஆனந்தியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய நேரத்தில் துளசி அன்புக்காக அலுவலகத்திற்கு சாப்பாடு கொண்டு வருகிறாள். இதை ஆனந்தி பார்த்து ரொம்பவே ஏங்கிப் போய் விடுகிறாள்.

அன்பு தன்னிடம் கோபத்தை காட்டும் நேரத்தில் துளசி அவனிடம் நெருங்கி பழகுவதை பார்க்கும் போது ஆனந்தியின் நிலைமை ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது.

இந்த ஆடு புலி ஆட்டம் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளியில் வந்தால் தான் முடியும்.

ஆனந்தி எப்போது இந்த விஷயத்தை வெளியில் சொல்கிறாள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்