சிங்கப்பெண்ணில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டும் அன்பு.. துளசி கொடுத்த கடைசி அஸ்திரம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு ஆனந்தியின் கல்யாணம் எல்லோருடைய சந்தோஷத்துடன் கோலாகலமாக நடைபெறும் என்றுதான் சீரியல் நேயர்கள் இவ்வளவு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த கல்யாணம் பல கலேபரங்களுக்கு நடுவே நடக்க இருக்கிறது. ஆனந்தி சொந்த ஊருக்கு சென்றதிலிருந்து அன்புவுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. இன்னொரு பக்கம் லலிதா அன்பு மற்றும் துளசியின் திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.

ஆனந்தி கழுத்தில் தாலி கட்டும் அன்பு

இந்த நேரத்தில் தான் துளசி கடைசி அஸ்திரமாக அன்பு விடம் ஒரு ஐடியாவை சொல்கிறாள். இதுவரை விசாரித்துப் பார்த்ததில் ஆனந்திக்கு உடல் அளவில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிந்து விட்டது.

இனி நீங்கள் செவரக்கோட்டைக்கு போய் ஆனந்தியிடம் பேசி அவள் சம்மதம் தெரிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் திடீரென ஆனந்தியின் அப்பா அம்மா சம்மதிக்கவில்லை என்றால் அதுவரை அத்தை காத்திருக்க மாட்டார்.

அதனால் ஆனந்தி மறுத்தாலும் பரவாயில்லை என்று அவள் கழுத்தில் தாலியை கட்டி இங்கே அழைத்து வாருங்கள். கோகிலாவின் கல்யாணத்தோடு சேர்த்து உங்கள் இருவரின் கல்யாணமும் நடக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய பிரச்சனை வெடிக்கும் என துளசி சொல்கிறாள்.

மேலும் அன்பு அப்பா போட்டோ முன்னாடி இருக்கும் தாலியையும் எடுத்து கொடுக்கிறாள். அன்பு துளசி கொடுத்த தாலியை வாங்கியதில் இருந்தே அவன் தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்து விட்டான் என்பது தெரிகிறது. ஆனந்தி கழுத்தில் அன்பு தாலி கட்டும் தருணத்தை எதிர் நோக்கி சிங்க பெண்ணே சீரியலை பார்க்கலாம்.