Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி தான் கர்ப்பமாக இருப்பதாய் நினைத்துக் கொண்டு மனது நொறுங்கிப் போய் இருக்கிறாள்.
ஒரு பக்கம் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணம் என தெரிந்து மகேஷ் ஆனந்தியை திருமணம் செய்து கொள்வான்.
ஆனந்தியின் போலி கர்ப்பம்
அன்புவின் காதல் தோற்று விட்டதே என ரசிகர்கள் புலம்பி கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத மர்மம் முடிச்சு ஒன்றை அவிழ்க்க இருக்கிறார் இயக்குனர்.
அதாவது ஆனந்தியின் கர்ப்பம் என்பது போலியான திட்டம். இந்த திட்டத்திற்கு காரண கர்த்தா அன்புவை ஒருதலையாக உருகி உருகி காதலித்த துளசி.
நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் அன்புவின் காதல் விஷயம் தெரிந்து துளசியின் அப்பா அம்மா அந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடுவார்கள்.
என்னடா துளசி கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்று நினைத்தால் இப்படி டம்மியாக முடிந்து விட்டது என்று தான் எல்லோரும் நினைத்து இருப்பார்கள்.
உண்மையில் துளசி தான் இப்படி சைலன்டாக வேலை பார்த்து இருக்கிறாள். மருத்துவரிடம் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக சொல்ல சொன்னது துளசி தான்.
இப்படித்தான் இந்த சீரியலில் அடுத்த கட்டம் நகரும். மித்ராவை தாண்டி ஒரு மிகப்பெரிய வில்லத்தனத்துடன் துளசி கேரக்டர் விரைவில் என்டர் ஆக இருக்கிறது.