Top 5 channels watched in 2023: சின்னத்திரை ரசிகர்களுக்கு நான் ஸ்டாப்பாக என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரபல தொலைக்காட்சிகளில் கடந்த 2023 ஆம் ஆண்டு டாப் 5 இடத்தைப் பிடித்த சேனல்களின் லிஸ்ட் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் முதல் இடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி போட்டனர்.
இதில் 5-வது இடத்தில் கபடி, கிரிக்கெட் என விதவிதமான மேட்சுகளை ஒளிபரப்பு செய்து ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’ சேனல் தான் பிடித்துள்ளது. பெரும்பாலும் இந்த சேனல் லைவ் கிரிக்கெட் மேட்ச்சுகளை ஒளிபரப்பு செய்து, ஸ்போர்ட்ஸ் பிரியர்களை தன் பக்கம் ஈர்த்தது.
இதைத் தொடர்ந்து 4-வது இடம் 24 மணி நேரமும் தொடர்ந்து திரைப்படங்களை ஒளிபரப்பு செய்த K டிவி தான் பிடித்திருக்கிறது. இந்த சேனல் என்ன தான் அரைச்ச மாவை அரைச்சாலும் சிலரின் ஃபேவரிட் படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது என்று கடந்த வருடம் முழுவதும் K டிவிக்கு அமோக ஆதரவு கிடைத்தது.
2023 சின்னத்திரையை கலக்கிய டாப் 5 சேனல்கள்
3-வது இடத்தில் ஜீ தமிழ் உள்ளது. இதில் இல்லத்தரசிகளை கவரும் விதத்தில் புது புது சீரியல்களை அறிமுகப்படுத்தினர். அது மட்டும் இல்ல சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரியாலிட்டி ஷோக்களையும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து, கடந்த வருடம் சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
2-வது இடத்தில் என்டர்டைன்மெண்டுக்கு பஞ்சம் இல்லாத விஜய் டிவி தான் உள்ளது. இதில் பிக் பாஸ், சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் என விதவிதமான ரியாலிட்டி ஷோக்களும் வித்தியாச வித்தியாசமான சீரியல்களையும் ஒளிபரப்பு செய்தனர்.
முதல் இடத்தில் சன் டிவி தான் சிம்மாசனம் போட்டு உக்காந்துள்ளது. இதில் ஒளிபரப்பாகும் கயல், சுந்தரி, சிங்க பெண்ணே, எதிர்நீச்சல் போன்ற தரமான சீரியல்களால் இந்த சேனலின் டிஆர்பி ஒவ்வொரு வாரமும் எகிறுகிறது. இதற்கெல்லாம் ஈடு கொடுக்க முடியாமல் பிற தனியார் சேனல்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகின்றனர். அப்படிப்பட்ட சன் டிவிக்கு தான் டாப் 5 சேனல்களின் லிஸ்டில் முதலாவது இடம் கிடைத்திருக்கிறது.