சன் டிவி சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்.. கையும் களவுமாக பிடித்து கைது பண்ணிய போலீஸ்

Sun Tv Serial Actress: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஏதாவது ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தாலே போதும் மக்களிடம் மிகவும் பரிச்சயம் ஆகி விடுவார்கள். அதனால் தான் சன் டிவியில் கிடைக்கும் வாய்ப்பை ஒவ்வொருவரும் சரியான முறையில் பயன்படுத்தி விடுவார்கள். அப்படித்தான் பெரிய திரையில் ஹீரோ ஹீரோயினுக்கு அம்மாவாக கலக்கிக் கொண்டிருந்த நடிகை பிரவீனா சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதுவும் சன் டிவி சீரியல் என்றதும் பெரிய திரைக்கு முழுக்கு போட்டுவிட்டு சின்னத்திரைக்கு வந்து விட்டார். அப்படி வந்த முதல் நாடகமே அவருக்கு மிகப்பெரிய ஹிட் நாடகமாக வெற்றி பெற்று பிரபலமாகிவிட்டார். அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் இரவு ஒளிபரப்பாகி வந்த பிரியமானவளே நாடகத்தின் மூலம் அறிமுகமான கேரக்டர் தான் உமா.

அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசாக்கு மாமியாராகவும், தற்போது சன் டிவியில் மதியம் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில், விக்ரமுக்கு அம்மா கதாபாத்திரத்தில் கௌரி ஆக நடித்து வருகிறார். இவர் பெரிய திரையில் வாத்தி, கோமாளி மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல படங்களில் நடித்து பரிச்சயமானவர். அப்படிப்பட்ட இவருக்கு தற்போது ஒரு விபரீதம் ஏற்பட்டு இருக்கிறது.

அதாவது இவரின் புகைப்படத்தை தவறான முறையில் மார்பிங் செய்து ஒரு இளைஞர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டார். இதை கண்டுபிடித்த இந்த நடிகை போலீஸ் இடம் புகார் கொடுத்து அந்த இளைஞரை கைது செய்யப்பட்டது. அதன் பிறகு ஜாமினில் வெளிவந்த அந்த இளைஞர் மறுபடியும் அந்த நடிகையை பழிவாங்குவதற்காக மகளின் புகைப்படத்தையும் தவறாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டார்.

இதனால் நொந்து போன பிரவீனா, அந்த நபரை கேரளா சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து விட்டார். போலீசார் இது குறித்து விசாரணை செய்தபோது டெல்லியில் அந்த இளைஞர் தலைமறைவாக இருக்கும் ரகசியத்தை கண்டுபிடித்து அதற்கென்று தனி படை அமைத்து அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து சிறைக்கு தள்ளிவிட்டார்.

அந்த நபர் நெல்லையை சேர்ந்த 24 வயது பாக்கியராஜ் என்பவர் தான் இந்த குற்றத்தை செய்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க பட்டது. கோபத்தால் புத்தி மழுங்கி செய்த ஒரு கொடூரம் ஒரு குடும்பத்தையே சின்னாபின்னமாக ஆட்டிப்படைத்து இருக்கிறது. அந்த வகையில் இந்த நபருக்கு தக்க தண்டனை கொடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →