குணசேகரன் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியை கிளப்பிய வைரல் புகைப்படம்

டிஆர்பி-யில் தும்சம் செய்து கொண்டிருக்கும் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல், நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. இந்த நிலையில் குணசேகரனின் பொண்டாட்டி ஈஸ்வரியாக நடிக்கும் கனிகாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்க வேண்டும் என எதிர்நீச்சல் சீரியலில் இருக்கும் 5 பெண்கள் நான்கு ஆண்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். இதில் குணசேகரனின் மனைவி ஈஸ்வரி கேரக்டரில் நடிகை கனிகா நடித்துக் கொண்டிருக்கிறார்.

முதலில் இளைய மருமகள் ஜனனி தான் குணசேகரனை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு மூத்த மருமகளான கனிகா தன்னுடைய மகன் போக்கும் அப்பாவை போல் இருப்பதால் கோபமடைந்து, மகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது குணசேகரனுக்கு பெரிய ஷாக் கொடுத்தது.

அதுமட்டுமல்ல மற்ற மருமகள்களையும் துணிச்சலுடன் எதிர்த்து பேச வேண்டும் என்பதை கனிகா செய்து காட்டினார். மேலும் கனிகா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது திருமணத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியின் மாமனிதன், விக்ரமின் கோப்ரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருக்கும் கனிகா, எதிர்நீச்சல் சீரியலின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் கனிகாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இது சரியாக 5 வாரம் ஆகுமாம். இதனால் காலில் பெரிய கட்டு போட்டு கொண்டு வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நிற்கும் கனிகாவின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் குணசேகரனின் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சு! என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். அவர் விரைவில் குணமடைந்து சீரியலில் மீண்டும் வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

எலும்பு முறிவு ஏற்பட்ட கனிகாவின் புகைப்படம்

kanika-cinemapettai
kanika-cinemapettai
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →