செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தலைநகரம் 2 விட 5 மடங்கு லாபம் பார்த்த வேட்டையாடு விளையாடு.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

Thalainagaram 2 And Vettaiyaadu Vilaiyaadu Collection Report: நேற்று மட்டும் திரையரங்குகளில் கிட்டத்தட்ட 8 படங்கள் வெளியாகி இருந்தது. ஒரே நாளில் இந்த படங்கள் வெளியானதால் கண்டிப்பாக வசூலில் பெரிய அளவு எல்லா படத்திற்கும் பாதிப்பு இருக்கும். அந்த வகையில் தலைநகரம் 2 மற்றும் வேட்டையாடு விளையாடு படத்தின் ரீ ரீலீஸ் ஆகிய படங்களும் நேற்று வெளியானது.

சுந்தர் சி யின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக தலைநகரம் இருந்தது. இப்போது தொடர் தோல்வி படங்கள் கொடுத்து வந்த நிலையில் சுந்தர் சி தலைநகரம் 2 படத்தை எடுக்கலாம் என்ற திட்டத்தில் இறங்கி இருந்தார். மீண்டும் ரைட் வருகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

Also Read : பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு கொடுத்த பில்டப்.. டாப் ஹீரோக்களால் பழைய கதையை உருட்டும் சுந்தர் சி

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக நொறுக்கி உள்ளார் சுந்தர் சி. முழுவதும் சண்டை காட்சிகள் மட்டுமே படத்தில் இடம்பெற்று இருந்தது. ஆகையால் முதல் நாளில் வெறும் 50 லட்சம் மட்டுமே தலைநகரம் 2 படம் பெற்றிருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து வெளியான கமலின் வேட்டையாடு விளையாடு படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

அதன்படி முதல் நாளிலேயே தலைநகரம் 2 படத்தைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் கிட்டத்தட்ட 80 சதவீத இருக்கைகளை வேட்டையாடு விளையாடு படம் ஆக்கிரமித்து இருந்தது. அதன்படி முதல் நாள் வசூலில் கிட்டத்தட்ட 2.50 கோடி வேட்டையாடு விளையாடு படம் வசூல் செய்திருக்கிறது.

Also Read : மொத்த யூனிட்டையும் குழப்பிய லோகேஷ் கனகராஜ். . பாபநாசம் கமல் போல் செய்த ட்ரிக்ஸ்

எத்தனை வருடங்கள் ஆகியும் இந்த படத்திற்கு தற்போது வரை மவுசு குறையாதது வேட்டையாடு விளையாடு படத்தின் கதைகளம் தான். கமல் தேர்ந்தெடுக்கும் படங்கள் எப்போதுமே காலம் தாண்டி தான் பேசும் என்பதற்கு உதாரணமாக இப்போது வேட்டையாடு விளையாடு படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ரீ ரிலீஸில் இவ்வளவு வசூல் ஒரு படம் வசூல் செய்யுமா என்ற ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் தலைநகரம் 2 படம் தான் வசூலில் பெருத்த அடி வாங்கி இருக்கிறது.

Also Read : அவர் போட்ட விதை விருட்சமா வளந்து நிக்குது.. இன்று ரிலீசான 7 படங்களை ஓரம்கட்டி கெத்து காட்டிய கமல்

Trending News