வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதி 67 விஜய்க்கு மட்டும் ஸ்பெஷல் இல்ல, த்ரிஷாவுக்கு அதைவிட ஸ்பெஷலாம்.. செம மேட்டரா இருக்கே!

விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டிலை ப்ரோமோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் லியோ படத்தை வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது..

இந்நிலையில் விஜய்யை விட த்ரிஷாவுக்கு தளபதி 67 ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் தளபதியின் 67-வது படமான லியோ, விஜய்க்கு மட்டுமல்ல த்ரிஷாவுக்கும் 67-வது படம் தான். இந்த மேட்டர் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த ட்ரீம் ஜோடி எப்படி லியோ படத்தில் இணைந்தது என்று இப்போதுதான் தெரிகிறது.

Also Read: லியோ படத்தால் மிஸ்கினுக்கு எகுறும் சம்பளம்.. ஒரு நாள் சம்பளத்தை கேட்டு வாயை பிளந்த திரையுலகம்

1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தின் மூலம் துணை நடிகை ஆக அறிமுகமான த்ரிஷா, அதன் பிறகு மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது வரை முன்னணி நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 39 வயதான த்ரிஷா இப்போதும் திருமணம் செய்து கொள்ளாமல் இளம் நடிகைகளுக்கெல்லாம் பயங்க டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் 14 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்த விஜய், த்ரிஷா இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு லியோ படத்தில் இணைந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆகையால் விஜய்க்கு மட்டுமல்ல த்ரிஷாவுக்கும் இது 67-வது படம் என்பதால் ரசிகர்களின் மத்தியில் இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பை எகிற விட்டது.

Also Read: கதை காப்பிக்கு கொடுத்த புது விளக்கம்.. விஜய், அஜித் இயக்குனர்களின் மாறுபட்ட சிந்தனை

அதுமட்டுமின்றி இந்த ஜோடியை திரையில் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதிலும் லியோ படத்திற்காக போடப்பட்ட பூஜையில் த்ரிஷா பேசும்போது, வெட்கப்பட்டு கொண்டிருந்த விஜய்யின் க்யூட் புகைப்படத்தை ரசிகர்கள் இப்போதும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் இந்த பூஜையில் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தளபதி 67 படம் த்ரிஷாவிற்கு எவ்வளவு ஸ்பெஷல் என்ற விஷயம் அவர்களுடைய ரசிகர்களிடம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

Also Read: தீபாவளிக்கு முன்பே வெளியாகும் லியோ.. பிரம்மாண்ட வசூலுக்கு பிளான் போடும் டீம்

Trending News