வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பக்கா கூட்டணியுடன் களமிறங்கும் விஜய்.. அதிரடியாய் வெளியான தளபதி 68 அப்டேட்

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்றைய நாள் மிகப்பெரிய கொண்டாட்ட தினமாக அமைந்திருக்கிறது. நேற்று வரை தளபதி 68 படத்தை பற்றி பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால் இன்றைய தினம் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பயங்கரமான ட்ரீட் வைத்திருக்கிறார்.

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அர்ஜுன், மன்சூர் அலிகான் சம்பந்தப்பட்ட இறுதி கட்ட காட்சிகள் சென்னை பனையூரில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் 68வது படத்தை பற்றி பல வியூகங்கள் எழுந்து வந்தன.

Also Read:ஜவான் படத்தால் அட்லீ ஏற்படுத்திய திகில்.. சிபாரிசுக்கு வந்த தளபதிக்கு போட்ட பெரிய கும்பிடு

தளபதி 68 படத்தை அட்லீ அல்லது கோபி சந்த் இயக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெங்கட் பிரபுவின் பெயரும் உள்ளே வந்தது. இது பலருக்கு வியப்பாக இருந்தாலும், இந்தக் கூட்டணி விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி விட்டன.

நடிகர் அஜித் குமாருக்கு ஒரு மங்காத்தா, சிம்புவுக்கு ஒரு மாநாடு போல் தற்போது தளபதியை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுக்க தயாராகி இருக்கிறார் வெங்கட் பிரபு. மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் வைக்கும் வகையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது உறுதியாகிவிட்டது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு யுவன், விஜய் படத்தில் பணியாற்ற இருக்கிறார்.

Also Read:இவ்வளவு சம்பளம் நம்மளால முடியாது.. விஜய் கால் சீட் கொடுத்தும் பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்

படத்திற்கான கதை தயாரிப்பில் தற்போது வெங்கட் பிரபு தீவிரமாக இறங்கி இருக்கிறார். அக்டோபர் ரிலீசுக்கு பிறகு தளபதி விஜய் ஒரு சின்ன பிரேக் எடுத்துவிட்டு நவம்பரில் தன்னுடைய 68வது படத்தின் வேலைகளில் இறங்க இருக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 150 கோடி சம்பளமாக பேசியிருக்கிறது ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் லியோ படத்திற்காக விஜய் ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் வெங்கட் பிரபுவுடன் படம் இயக்குவது உறுதியானது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க விருப்பம் மற்ற நடிகர்களை பற்றி விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:ஒன்னு இருக்கு ஆனா இல்ல.. லியோ படத்தில் பயங்கரமான புதிர்களை போடும் லோகேஷ் கனகராஜ்

Trending News