திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஏற்கனவே தளபதியுடன் நடித்துள்ள மாமன்னன் ரத்தினவேல்.. 2ம் முறையாக லோகேஷ் வைத்துள்ள டிவிஸ்ட்

Thalapathy Vijay – Fahad Fassil: பன்முக திறமை கொண்ட நடிகர் பகத் பாசில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் ஹீரோவாக நடித்த உதயநிதி, வடிவேலுவை தாண்டி பகத் பாசில் தான் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறார்.

பகத் பாசில் உலக நாயகன் கமலஹாசன் உடன் நடித்தது போல் தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும், இவர்களுக்குள் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு தொடர்பு இருக்கிறது. விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த காதலுக்கு மரியாதை படத்தை இயக்கியவர் பகத் பாசிலின் அப்பா ஃபாசில்தான். அதேபோல் அந்த காதலுக்கு மரியாதை படத்தின் மலையாள ரீமேக்கில் பகத் நடித்திருந்தார்.

Also Read:மொத்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒத்த வார்த்தை.. லியோ ஆடியோ லான்ச்காக காத்திருக்கும் விஜய்

அதேபோன்று இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தும் நடித்திருக்கிறார்கள். அது ரசிகர்களால் அவ்வளவாக கவனிக்கப்படாத காட்சியாக இருக்கிறது. சமீபத்தில் மாமன்னன் ரிலீசுக்கு பிறகு இந்த வீடியோ பயங்கர வைரல் ஆகி வருகிறது. நடிகர் பகத் பாசில் மற்றும் தளபதி விஜய் இருவரும் இணைந்து ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள். இது இவர்கள் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள்.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பகத் ஏஜென்ட் அமர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படமும் அவருக்கு மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. தற்போது லோகேஷ் இயக்கிக் கொண்டிருக்கும் லியோ படம் அவருடைய LCU -வில் வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் லியோ படத்தின் மூலம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் நுழைகிறார்.

Also Read:விஜய்யைப் பார்த்து காப்பியடித்த ரஜினி.. வாண்டடாக கண்டன்ட் கொடுத்த சூப்பர் ஸ்டார்

பகத் பாசில் ஏற்கனவே அதில் ஒரு அங்கமாக இருக்கிறார். விக்ரம் படம் சம்பந்தப்பட்ட கேரக்டர்கள் சிலர் லியோவில் நடித்திருக்கிறார்கள். உலகநாயகன் கமலஹாசன் இந்த படத்தில் கேமியோ ரோலில் தோன்ற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் விக்ரம் படத்தில் நடித்த பகத்தும் லியோவில் வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எப்போதுமே தன்னுடைய படத்தின் ஒரு சில கேரக்டர்களை சர்ப்ரைஸ் ஆக வைத்திருப்பார். அது போன்று கமல், சூர்யா போன்றவர்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஏற்கனவே மாமன்னன் படத்தின் ஹைப் தமிழ் சினிமாவில் அதிகம் இருப்பதால், பகத் பாசிலை லியோவின் ஏதாவது ஒரு காட்சியில் லோகேஷ் கனகராஜ் வர வைக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

Also Read:சத்தமே இல்லாமல் கருத்துக்கணிப்பில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த ஹீரோ.. லயோலா காலேஜ் வெளியிட்ட ரிப்போர்ட்

Trending News