வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

எகிறும் தளபதியின் தங்கச்சி மார்க்கெட்.. கவினுக்கு ஜோடியாக அவர்தான் வேண்டுமாம்

சின்னத்திரையில் ஒரு நடிகராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த கவின் தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் ஒரு ஹீரோவாக இருக்கிறார். இவரின் நடிப்பில் கடைசியாக லிப்ட் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து அவர் தற்போது ஊர் குருவி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்குப் பிறகு நடிகர் கவின் மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒலிம்பிக் ஸ்டூடியோ தயாரிப்பில் கணேஷ் பாபு இயக்கும் இந்த திரைப்படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர் வேறு யாருமல்ல நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் தான். மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் அவர் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.

அதில் தங்கை கேரக்டரில் நடித்துள்ள இவருக்கு தற்போது கவின் நடிக்கும் புதிய படத்தின் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தத் திரைப்படம் குறித்து இயக்குனர் கணேஷ் பாபு கூறியிருப்பதாவது, இப்படம் ஒரு காதல் கதையை கொண்டதாகவும், இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் இப்போது இருக்கும் தலை முறைகளுக்கு ஏற்ற மாதிரி இந்த கதை இருக்கும். இப்படம் காதல், அன்பு, வெறுப்பு போன்று எல்லாம் கலந்து இருக்கும் விதமாக எடுக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது தவிர கல்லூரி காலத்திலிருந்தே தனக்கு பழக்கமான கவின் இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த காதல் கதை முழுக்க முழுக்க சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே எடுக்கப்பட இருப்பதாக கூறிய அவர் இந்தபடம் அனைவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News