Vijay-Tamilaga Vetri Kazhagam: நீண்ட காலமாக தமிழகத்தில் இரு பெரும் கட்சிகள் தான் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அதில் திமுகவை பொறுத்த வரையில் கலைஞர் கருணாநிதி, அவருக்கு அடுத்தபடியாக முதல்வர் மு க ஸ்டாலின், அவருக்கு அடுத்தபடியாக உதயநிதி என வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
அதனாலேயே குடும்ப அரசியல் என எதிர்க்கட்சிகளால் திமுக விமர்சிக்கப்பட்டதும் உண்டு. அதை அடுத்து விஜயகாந்த், கமல் என அடுத்தடுத்து நடிகர்கள் கட்சியை தொடங்கினார்கள். அதில் விஜயகாந்த் நம்மை விட்டு சென்ற நிலையில் கட்சி அவருடைய மனைவியின் பொறுப்பிற்கு வந்திருக்கிறது.
அடுத்ததாக கமல் கட்சியை ஆரம்பித்தாலும் பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்பதே நிதர்சனம். இந்த சூழலில் விஜய் ஆரம்பித்துள்ள கட்சி எந்த அளவுக்கு மற்ற கட்சிகளுக்கு போட்டியாக அமையும் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.
அதிலும் விஜய் ஸ்டாலினுக்கு போட்டியாக இருப்பாரா அல்லது உதயநிதிக்கு போட்டியாக இருப்பாரா என்ற கேள்வி தான் அதிகமாக இருக்கிறது. அதேபோல் குடும்ப அரசியலுக்கு தளபதியின் தமிழக வெற்றி கழகம் முற்றுப்புள்ளி வைக்குமா என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் ஒருபுறம் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி கட்சி பெயரை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் விஜய். இது ஒரு புறம் இருக்க கட்சி ஆரம்பித்துள்ள தளபதிக்கு உதயநிதி ஸ்டாலின், சரத்குமார் ஆகியோர் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் சீமான் ரசிகர்களின் ஆதரவை வைத்து ஆட்சியைப் பிடித்து விட முடியாது. கட்சி தொடங்கலாம் ஆனால் அதை தொடர்வது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படி பல்வேறு விமர்சனங்களுக்கு இடையில் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள விஜய் எந்த அளவுக்கு நினைத்ததை சாதிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Also read: அரசியல் பொழுதுபோக்கு அல்ல, என் ஆழமான வேட்கை.. மக்கள் பணிக்காக நடிப்புக்கு முழுக்கு போடும் விஜய்