புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

Thalapthy Vijay Birthday: தளபதி விஜய்யின் 40 வருட சினிமா வாழ்க்கையில் அவர் எத்தனையோ நடிகைகள் உடன் ஜோடி போட்டு இருந்தாலும், அவருடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த ஏழு ஹீரோயின்களுடன் அவர் நடித்த படங்கள் எப்பவுமே ஃபேவரிட் ஆக இருக்கிறது. மீண்டும் இந்த ஹீரோயின்களுடன் தளபதி ஜோடி சேர மாட்டாரா என்ற ஏக்கமும் இருக்கிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள் இந்த காதல் ஜோடிகள்.

சங்கவி: நடிகை சங்கவி, விஜய் மற்றும் அஜித் இருவருக்குமே வெற்றி ஹீரோயின் என்று சொல்லலாம். விஜயின் ஆரம்ப கால படங்களில் அதிகமாக அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தது சங்கவி தான். இவர்கள் இருவரின் காதல் காட்சிகள் கொஞ்சம் ஓவர் கிளாமராக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் விஜய்க்கு பொருத்தமான ஜோடி என்றால் அது சங்கவி தான் என்று தமிழ் சினிமா ரசிகர்களே ஏற்றுக் கொண்டார்கள்.

Also Read:40 வருட திரையுலக வெற்றிக்கு தளபதி மெயின்டைன் செய்யும் 5 சீக்ரெட்.. இரண்டு தலைமுறையாக கொண்டாடப்படும் ஹீரோ

ரம்பா: 90களின் காலகட்டத்தில் நடிகை ரம்பா நிறைய முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும், திரையில் நடிகர் விஜய் உடன் நடித்த படங்கள் இன்னுமே அவருக்கு பொருத்தமாக அமைந்தது. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் விஜய் மற்றும் ரம்பா ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு மின்சார கண்ணா மற்றும் என்றென்றும் புன்னகை திரைப்படங்களிலும் இவர்கள் இணைந்து நடித்தார்கள்.

சிம்ரன்: இன்று வரை 90ஸ் கிட்ஸ் களின் மிகப்பெரிய ஏக்கமாக இருப்பது விஜய் மற்றும் சிம்ரனை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்பதுதான். அந்த அளவுக்கு இந்த ஜோடி திரையில் மேஜிக் செய்தது என்று தான் சொல்ல வேண்டும். விஜய்க்கு சமமாக நடனம் ஆடக்கூடிய ஒரே ஹீரோயின் என்று கூட சிம்ரனை சொல்லலாம். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளியான பிரியமானவளே திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

த்ரிஷா: சிம்ரனை அடுத்து விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோயின் நடிகை த்ரிஷா. இவர்கள் இருவரது நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இருக்கிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணையும் லியோ திரைப்படத்திற்காக ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் காத்து கிடக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:ஒரு மாசமாக திட்டம் போட்ட தளபதி.. துளிகூட கை கொடுக்காத SAC குடும்பம்

ஷாலினி: நடிகை ஷாலினி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இன்றுவரை சிறந்த நடிகையாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். விஜய் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த படத்தில் முழுக்க முழுக்க காதல் மட்டுமே நிரம்பி இருந்தாலும் ஒரு முத்த காட்சிகள் கூட இல்லாமல் நடித்து பெயர் பெற்ற நடிகை ஷாலினி.

சமந்தா: பல வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் நடித்த நடிகைகளில் அவருடைய ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் நடிகை சமந்தா. கத்தி மற்றும் தெறி திரைப்படங்களில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் விஜய்க்கு பொருத்தமான ஜோடி என்றால் சமந்தா தான் என்று சொல்லும் அளவிற்கு இவர்களுடைய காம்பினேஷன் இருந்தது.

காஜல் அகர்வால்: தளபதி விஜய் உடன் இணைந்து காஜல் அகர்வால் துப்பாக்கி மற்றும் ஜில்லா படங்களில் நடித்திருந்தார். இதில் துப்பாக்கி திரைப்படத்தில் இவர்கள் இருவருடைய காட்சிகள் நல்ல வரவேற்பு பெற்றது. காஜல் அகர்வாலின் துறுதுறுப்பான நடிப்பு மற்றும் விஜய்யின் காமெடி என இந்த கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது.

Also Read:மீண்டும் வெடிக்கும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் பிரச்சனை.. விஜய்க்கு போட்டியாக கமலை இழந்து விடும் திரையுலகம்

Trending News