வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

விக்ரம் படத்தில் நடிக்காமல் சும்மா இருந்திருக்கலாம்.. லோகேஷ் மீது கடுப்பில் இருக்கும் நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து வருகின்றனர். மேலும் படத்தை கச்சிதமாக எடுத்து முடித்து இருக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் அவரின் மீது தீராத கோபத்தில் இருக்கிறார். அதாவது விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள் இருப்பது போன்று காட்டப்பட்டிருந்தது அந்த கேரக்டரில் ஷிவானி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆனால் படத்தில் இவர்கள் மூவரும் வரும் காட்சிகள் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அதை பற்றி மைனா நந்தினி மிகவும் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது முதலில் நாங்கள் மூவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய எடுக்கப்பட்டது.

ஆனால் படத்தில் அந்த காட்சிகள் எதுவும் இல்லாமல் அனைத்தும் எடிட்டிங்கில் வெட்டப்பட்டு விட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். மேலும் அந்த காட்சிகள் இடம் பெற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் லோகேஷ் கனகராஜ் ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் மைனா நந்தினி இயக்குனர் மீது தனக்கு இருக்கும் கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் உண்மையில் அந்த காட்சிகள் திரைக்கதையின் வேகத்திற்கு தொய்வு ஏற்படும் வகையில் இருந்ததால்தான் லோகேஷ் அந்த காட்சிகளை நீக்கி விட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

Trending News