வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொட்டிக் கடைகளுக்கு வாழ்வு தந்த மணிரத்தினம்.. பொன்னியின் செல்வன் செய்த சாதனை

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் தற்போது வரை பல சாதனைகளை முறியடித்து வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பல முன்னணி பிரபலங்கள் படத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இருந்தது

அதேபோல் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை போல மற்ற படத்திற்கு கிடைத்ததில்லை. மேலும் தமிழில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலுமே இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கிறது.

Also Read :சத்தமே இல்லாமல் மணிரத்னம் செய்த தில்லாலங்கடி வேலை.. பொன்னியின் செல்வனில் காக்கப்பட்ட சீக்ரெட்ஸ்

பொன்னியின் செல்வன் படம் வெளியாகி கிட்டத்தட்ட 15 நாட்களை நெருங்கிய நிலையில் தற்போது வரை எல்லா திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. வசூலிலும் நல்ல லாபத்தை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் படத்தால் சின்ன சின்ன வியாபாரங்களும் நல்ல லாபம் பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இப்போதும் பொன்னியின் செல்வன் படத்தின் 4:00 மணி ஷோ ஹவுஸ் ஃபுல்லாக உள்ளதாம். அவ்வாறு அதிகாலையே மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதுகிறதா. மென்பொருள் ஊழியர்கள் இரவு நேர வேலையை முடித்துவிட்டு நேராக பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க செல்கிறார்களாம்.

Also Read :பாகுபலியை தூக்கி சாப்பிட்ட பொன்னியின் செல்வன்.. திரையுலக கிங் என நிரூபித்த மணிரத்னம்

இதனால் திரையரங்குகளை சுற்றி நிறைய சின்ன வியாபார கடைகள் உள்ளது. அதாவது டீக்கடை, பிரியாணி கடை போன்றவை தற்போது நல்ல வியாபாரம் ஆகி வருகிறதாம். வேலையை முடித்துவிட்டு அப்படியே வருவதால் இந்த கடைகளில் சாப்பிட்டுவிட்ட பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க ரசிகர்கள் செல்கிறார்களாம்.

சாதாரணமாக ஒரு படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்கள் மட்டுமே நல்ல லாபத்தை பெற்று தரும். ஆனால் பொன்னியின் செல்வன் படம் பல பேருக்கு பல வகையில் லாபத்தை பெருக்கி தருகிறது. இதனால் தற்போது திரையரங்கை சுற்றி உள்ள சின்ன வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read :நந்தினி, குந்தவை கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள்.. சிஷ்யைக்கு சிபாரிசு செய்த மணிரத்னம்

Trending News