அஜித்தின் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு படத்திற்காக அவருடைய ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்தின் மாஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படம் வெளியானது. அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
Also Read: 27 வருடங்களுக்கு முன் அஜித்துக்கு ஏற்பட்ட சங்கடம்.. வளர்த்துவிட்டு அழகு பார்த்த வில்லன்
நெகடிவ் ரோல் ஹீரோவாக நடித்திருந்த அஜித்தின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. 24 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடியை நெருங்கி சாதனை படைத்தது. அந்த வகையில் அஜித்தின் கேரியரில் இந்த படம் ஒரு முக்கிய இடத்தையும் பிடித்தது.
இப்படம் வெளிவந்து 11 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட இன்னும் ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது. இதனாலேயே வெங்கட் பிரபு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு தயாராகி இருக்கிறார். தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் அவர் படு பிஸியாக இருக்கிறார்.
அதிரிபுதிரியாக ரெடியாக போகும் மங்காத்தா-2

Also Read: விஜய்க்கு போட்டியாக ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர்களுடன் அடுத்தடுத்து 5 படங்கள்
அஜித்தின் 50வது படமாக வெளிவந்து வெற்றி கண்ட மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இந்த படத்தில் இணைந்து நடித்த அஜித்-அர்ஜுன் இருவரும் சேர்ந்து தற்போது புகைப்படம் எடுத்திருக்கின்றனர். இந்த புகைப்படத்தை ஆக்ஷன் கிங் தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு ட்ரெண்டாக்கி உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்தால் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிகிறது. கூடிய விரைவில் இந்த படத்தை குறித்த முழு விவரமும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நிச்சயம் அஜித் வித்யாசமான கெட்டப்பில் கலக்குவார் என்றும் ரசிகர்கள் நம்பி உள்ளனர்.
அஜித்துடன் சர்ப்ரைஸ் புகைப்படம் வெளியிட்ட ஆக்ஷன் கிங்

Also Read: மங்காத்தா 2-ல் வாய்ப்பு கேட்டு நச்சரிக்கும் பிரபலம்.. கதையையே மாற்றிய வெங்கட் பிரபு