செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கைகலப்பில் முடிந்த கமல் படத்தின் டப்பிங்.. ஏஜென்ட் உப்பிலியப்பனின் கோபத்தை தனித்த ஆண்டவர்

The actor involved in the scuffle in the movie Kamal: உலக நாயகனின் 60 வருட சினிமா பயணத்தில் அவருக்கு மறக்க முடியாத இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த படம் தான் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம். இந்த படத்தில் திரை பட்டாளமே இணைந்து நடித்தது. இதில் ஏஜென்ட் உப்பிலியப்பன் என்ற கேரக்டரில் நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதி நடித்தார். விக்ரம் படத்தில் இவர் கமலுக்கு நண்பராக வந்தார்.

மேலும் இந்த படத்திற்கு முன்பு சந்தான பாரதி இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் குணா, மகாநதி என்ற இரண்டு அற்புதமான படங்களில் நடித்திருக்கிறார். அதில் குணா படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் போது கைகலப்பே வந்திருக்கிறது.

பொதுவாக கமல் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் சரி இல்லை என்றால் அப்படியே ஒதுக்கி விடுவாராம். அப்படி ரஜினி, கமலுக்கு நெருங்கிய நண்பராக இருந்த ஒருத்தர் நிறைய தொந்தரவு கொடுத்திருக்கிறார். அதுவும் குணா படத்தில் அந்த நடிகர் கைகலப்பில் ஈடுபட்டு ரகளை செய்திருக்கிறார்.

Also Read: புதிதாக உருவாகும் 5 வரலாற்றுப் படங்கள்.. 33 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கமல் – மணிரத்தினம்

கமல் படத்தில் கைகலப்பில் ஈடுபட்ட நடிகர்

அந்த நடிகரின் டப்பிங் சரி இல்லை என்று படத்தின் இயக்குனர் சந்தான பாரதி கமலிடம் மூன்று முறை சொல்லி இருக்கிறார். குணா படத்தில் கமலின் சித்தப்பாவாக நடிகர் ஜனகராஜ் நடித்தார். ஆனால் இவருடைய டப்பிங் சரியில்லை என்று சரி செய்து கொள்ளும்படி சந்தான பாரதி கேட்டு இருக்கிறார்.

ஆனால் அவர், ‘நான் கரெக்டா தான் பேசுறேன்’ என்று ஜனகராஜ் சந்தான பாரதியுடன் சண்டை போட்டது மட்டுமல்லாமல் அடிதடியிலும் இறங்கி உள்ளார். கடைசியில் கமல் தான் அந்த பஞ்சாயத்தை தீர்த்து விட்டார். படத்தையும் ஒரு வழியாக எடுத்து முடித்து ரிலீஸ் செய்தனர்.

Also Read: ரகசியமாய் அடிக்கடி அமெரிக்கா செல்லும் கமல்.. காஸ்டியூம் டிசைனருடன் இப்படி ஒரு கூட்டணியா?

Trending News