வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயிலர் வசூலை லியோவால் முறியடிக்க முடியாது.. மீசையை எடுத்துறேன் என அக்ரிமெண்ட் போட்ட நடிகர்

Jailer, Leo: ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்ததால் ஜெயிலர் படத்தை கண்டிப்பாக வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு இருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் ஜெயிலர் படத்தில் மற்ற மொழி பிரபலங்களையும் நடிக்க வைத்து மல்டி ஸ்டார் படமாக உருவாக்கி இருந்தார். இப்போது இதற்கு கை மேல் பலனாக ஜெயிலர் படம் வசூலை வாரி குவித்தது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தால் படக்குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கியது.

Also Read : லியோ படத்தை மண்ணோடு புதைக்க திட்டம்போடும் உதயநிதி.. ரெட் ஜெயிண்ட்டை வைத்து விஜய்க்கு எதிராக எடுக்கும் முடிவு

இந்த சூழலில் சினிமா விமர்சகர்கள் பலரும் ஜெயிலர் படத்தை காட்டிலும் லியோ படம் அதிகமாக வசூல் செய்யும் என்று ஆணித்தரமாக சொல்லி வருகிறார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்து அக்ரீமெண்ட் போட்டு தருவதாக கூறியிருக்கிறார் மீசை ராஜேந்திரன். சமீபகாலமாக யூடியூபில் சர்ச்சையான கருத்துக்களை கூறி பிரபலமாகி வருகிறார் மீசை ராஜேந்திரன்.

ரஜினியின் தீவிர ரசிகரான இவர் விஜய்யை பற்றிய சில மோசமான கருத்துக்களை கூறி வருகிறார். அதில் ஜெயிலர் படம் 600 கோடியை தாண்டி வசூல் செய்த நிலையில் லியோ படம் 400 முதல் 500 கோடி தான் வசூல் செய்யும். அதற்கு மேல் போக கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்று அடித்து சொல்லியிருக்கிறார்.

Also Read : ஜவான் பார்த்துட்டு பின் வாங்கினாரா விஜய்.? அட்லியோட அடுத்த ஸ்கெட்ச் இந்த டாப் ஹீரோவுக்கு தான்

ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடித்தால் தன்னுடைய மீசையை எடுத்து விடுகிறேன் என்று சவால் விட்டிருக்கிறார். அதாவது சினிமாவை பொறுத்தவரையில் எல்லா நடிகர்களுக்குமே ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களுடைய நடிகர்களின் படங்கள் நன்றாக வசூல் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசையாக இருக்கிறது.

அதனால் மற்றொரு நடிகரை பற்றி தேவையில்லாத கருத்துக்களை வெளியிடுவது தவறான விஷயம் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் விஜய் முன்பு மாணவர்களுக்கு உதவி செய்யாமல் தற்போது செய்வதற்கான காரணம் அரசியலுக்கு வருவது தான்.

அதுவும் அந்த மேடையில் ஓட்டுக்கு காசு வாங்க வேண்டாம் என்று அரசியல் பற்றி தான் பேசி இருந்தார். இவ்வாறு விஜய் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கை பற்றியும் மீசை ராஜேந்திரன் தொடர்ந்து விமர்சனம் செய்த வருகிறார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.

Also Read : ஜெயிலர் வர்மன் போல் மாறிய மம்மூட்டி.. கறை படிந்த பல், மிரட்டும் லுக்கில் வெளிவந்த பிரமயுகம் போஸ்டர்

Trending News