வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லியோ-வில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள கில்மா நடிகை.. வான்டடா தளபதிக்கு கொடுத்த முத்தம்

Leo Movie Update: மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் இருவரும் சேர்ந்து செய்திருக்கும் அடுத்த தரமான சம்பவம் தான் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது. இதில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர்களுடன் இப்போது லியோ படத்தில் கில்மா நடிகையும் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read: சங்கீதா விஜய் திருமண நாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை.. எரியுற நெருப்பில் பெட்ரோல ஊத்திட்டாங்க!

இந்நிலையில் படத்தில் லோகேஷ் ஒரு சில நடிகர் நடிகைகளை சஸ்பென்ஸாக மறைத்து வைத்திருக்கிறார். இதனை ரசிகர்களுக்கு படத்தைப் பார்க்கும்போது சர்ப்ரைஸ் ஆக காட்ட வேண்டும் என்று திட்டமிட்டார். ஆனால் அவரது திட்டத்திற்கு மாறாக அந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் அடுத்தடுத்த பேட்டியில் சீக்ரெட்டை எல்லாம் உளறிக் கொட்டுகின்றனர்.

இப்போது லியோ படத்தில் கெஸ்ட் ரோலில் கில்மா நடிகை ஒருவர் நடிப்பதாக அந்த நடிகையே சமீபத்திய பேட்டியில் உளறி கொட்டியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டுகளில் ஜெமினி, வில்லன், வின்னர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகை கிரண். இவருக்கு இப்போது சுத்தமாகவே சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் சோசியல் மீடியாவில் கிளாமர் தூக்கலான புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடுகிறார்.

Also Read: சியர்ஸ் கேளாக லியோ டாட்டூவுடன் த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 40 வயசுலையும் என்ன பொண்ணுடா

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘லியோ படத்தில் நான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். இது வதந்தி அல்ல 100% உண்மை’ என்று கூறி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். லியோ படத்தில் விஜய் எப்படி இருக்கிறார் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, வாண்ட்டடாக தளபதிக்கு பிளைன் கிஸ் கொடுத்து தன்னுடைய கிரஷ்-ஐ வெளிப்படுத்தினார்.

திருமலை படத்தில் ஜக்கம்மாவாக ஐட்டம் பாடலுக்கு நடனமாடி தளபதி ரசிகர்களை குஷிப்படுத்திய கிரண், லியோ படத்தில் இருக்கிறார் என தெரிந்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. அதுமட்டுமல்ல இவர் எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கிறார் என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: 10 நாள் நவராத்திரி விடுமுறையை குறி வைக்கும் 7 படங்கள்.. லியோ வசூலில் சாவுபயத்த காட்டிடுவாங்க போல!

Trending News