வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கார்த்திக்கு விருது குடுக்கலன்னா அந்த விருதுக்கே மரியாதை இல்ல.. ஓவரா புகழ்ந்த பாட்டி நடிகை

நடிகர் கார்த்தியின் உடல்வாகு கிராமத்து இளைஞனின் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும். அந்த வகையில் கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் படமே அவருக்கு புகழை வாங்கி தந்தது. இதைத்தொடர்ந்து கார்த்தி நிறைய கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கொம்பன் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் முத்தையா உடன் விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை ஒருவர் கார்த்திக்கு விருது குடுக்கலன்னா விருதுக்கே மரியாதை இல்லை என்று கூறியுள்ளார். அதாவது விருமன் படத்தில் வடிவுக்கரசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் உள்ளதால் பல நடிகர்கள் பற்றி இவருக்கு நன்கு தெரியும்.

அந்தவகையில் சிவக்குமார் உடன் வடிவுக்கரசி நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வடிவுகரசி, சிவகுமாரின் வாரிசுகள் சொக்கத்தங்கம் எனப் பாராட்டிப் பேசியுள்ளார். ஏனென்றால் எல்லா சினிமா வாரிசுகளும் இதுபோன்ற மரியாதையுடன் நடந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை.

ஆனால் சிவகுமார் கொடுத்து வைத்தவர். அவரது இரண்டு மகன்களுமே நல்ல பண்பு உடையவர்கள் என கூறியிருந்தார். மேலும் விருமன் படத்தில் மிகப்பெரிய டயலாக்கை கார்த்தி சிங்கள் ஷாட்டில் நடித்தார். கேமராவுக்கு பின்னால் கார்த்தியின் நடிப்பை பார்த்த அசந்துவிட்டேன் என வடிவுகரசி கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததை பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அப்போது சூர்யாவுக்கு முன்பே விருது கிடைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கார்த்திக்கு விருது குடுக்கலன்னா விருதுக்கு மரியாதை இல்லை என்று வடிவுகரசி கூறியுள்ளார். இவர் சொன்னது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ஒரு மூத்த நடிகையின் வாயால் இவ்வாறு சொன்னது கார்த்திக்கு மிகப்பெரிய விருது தான்.

Trending News