Tamil Actress: தமிழ் சினிமாவில் 50களின் இறுதியிலும் 60களின் தொடக்கத்திலும் சரோஜாதேவி இல்லாமல் சாண்டோ சின்னப்ப தேவர் படமே எடுத்ததில்லை. ‘கன்னடத்துப் பைங்கிளி’ என ரசிகர்கள் இவரை செல்லமாக அழைப்பார்கள். இப்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு எல்லாம் இவர்தான் பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். மேக்கப் தொடங்கி அவர் போடும் காஸ்டியூம் மற்றும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தோரணை என இவர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பண்ண கூடியவர்.
சினிமாவில் சரோஜாதேவி போல் வரவேண்டும் என்ற ஆசையில் திரை உலகிற்கு நுழைந்த இளம் நடிகை, கடைசியில் பலான வழக்கில் கைதானது தான் மிச்சம். கந்தா கடம்பா கதிர்வேலா படத்தில் அறிமுகமான நடிகை புவனேஸ்வரி தமிழ், தெலுங்கு போன்ற பிறமொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். அதிலும் இவர் கவர்ச்சி கதாபாத்திரத்தில் கண்டமேனிக்க பூந்து விளையாடினார்.
இவருடைய கண், சிரிப்பு தான் இவருக்கு பிளஸ் ஆக இருந்தது. வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, ராஜராஜேஸ்வரி, ஒரு கை ஓசை, பாசமலர் என சூப்பர் ஹிட் அடித்த சீரியல்களில் வில்லியாகவும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
Also read: ஊரே போற்றும் எம்ஜிஆரையே மோசமான காட்சிகளில் நடிக்க வைத்த 5 படங்கள்.. இயக்குனரால் ஏற்பட்ட அவமானம்
நடிகை மீது பாய்ந்த பலான வழக்கு
கடைசியாக இவர் சந்திரலேகா என்ற சீரியலில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் தவிக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் நுழையும் போது சரோஜாதேவி போலவே சிறந்த நடிகையாக மாற வேண்டும் என்ற ஆசையில் நுழைந்தேன்.
ஆனால் அரசியல் ஆர்வம் கொண்ட என்னை சதி செய்து, பலான வழக்குகளில் சிக்க வைத்தார்கள். அதையெல்லாம் பொய் என நிரூபித்து, அந்த வழக்கிலிருந்து நான் விடுதலை ஆனேன். அதன் பிறகு தான் என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. இருப்பினும் என்னுடைய குடும்பத்துடன் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்.
என்னுடைய இந்த நிலைக்கு காரணம் என்னுடைய அம்மா தான். தற்போது நிறைய ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என்று நடிகை புவனேஸ்வரி, சினிமாவில் சாதிக்க முடியவில்லை என்ற தன்னுடைய ஆதங்கத்தை சமீபத்திய வீடியோவில் பதிவு செய்தார்.
Also read: உருகி உருகி காதலித்த சிவாஜி – பத்மினி.. சேராமல் போனதற்கு இப்படி ஒரு காரணமா?