வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெயிலருக்கு அதிர்ஷ்ட தேவதையாக கொட்டிக் கொடுத்த நடிகை.. கடைசியா ஒண்ணுமே இல்லாமல் வெறும் கையில் நிற்கும் பரிதாபம்

Jailer Movie: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் கடந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இமாலய வெற்றியை பெற்று வசூல் அளவில் சாதனை படைத்து கொடுத்திருக்கிறது. இப்படம் வெளிவருவதற்கு முன்னரே அனைவரது கவனத்தையும் ஈர்த்து படத்தை பார்ப்பதற்கு சுண்டி இழுக்கப்பட்டது.

அதற்கு முக்கியமான காரணம் ரஜினியின் நடிப்பை பார்ப்பதற்கு தான் என்று சொன்னாலும், இதைவிட இன்னொரு விஷயம் அதிகமாக ஈர்த்திருக்கிறது. அதாவது சின்ன குழந்தைகள் முதற்கொண்டு ஜெயிலர் படத்தின் பெயரை உச்சரித்ததற்கு முக்கிய காரணம் அந்தக் காவலா சாங் தான்.

Also read: வசூல் வேட்டையாடும் டைகர் முத்துவேல் பாண்டியன்.. மிரள வைக்கும் 3வது வார ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இப்படத்தில் தமன்னா ஒரு பாட்டுக்கு தான் வருவார் என்று தெரிவதற்கு முன் இந்தப் பாடலை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் திசை திருப்பி வைத்தது இவருடைய ஆடலும் முகபாவனையும் தான். என்னதான் பாடல் ஒரு பக்கம் பிரபலமானாலும், இதற்கு ஆடிய தமன்னா தான் இப்படத்திற்கு முழுவதும் அதிர்ஷ்ட தேவதையாக அமைந்திருக்கிறார்.

அதாவது படம் பார்ப்பதற்கு முன்னே காவலா சாங் தான் அனைவரது மனதையும் அதிகமாக இழுத்தது. வீட்டில் சின்ன குழந்தைகள் ஜெயிலர் படம் என்று சொல்வதை விட காவலா படம் பார்க்க வேண்டும் என்றுதான் அடம் பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் தமன்னாவை வைத்து படத்தை பார்க்க கொக்கி போட்டு இழுத்திருக்கிறார்கள். அத்துடன் தமன்னாவின் வளர்ச்சியும் அபரிதமாக உயர்ந்து விட்டது.

Also read: ஒரே படத்தில் ஒரேடியாக உயர்ந்த லோகேஷ், நெல்சனின் சம்பளம்.. இதுக்கு தான் பெரிய இடத்து சகவாசம் வைக்கணும் போல

ஒரு பாட்டுக்கு ஆடினாலும் நச்சுன்னு புகழை பிடித்துக் கொண்டார். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு மிக முக்கிய காரணமாக தான் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இப்படத்தில் நடித்த ரஜினிக்கு கோடி கணக்கில் சம்பளம் மற்றும் கார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதே மாதிரி நெல்சனுக்கும் தயாரிப்பாளர் கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் முக்கியமான பாடலுக்கு ஆடி உலகம் முழுவதும் வெற்றிக்கு காரணமான தமன்னாவுக்கு ஒன்னும் கிடைக்காமல் வெறும் கையில் பரிதாபமாக தவிக்க விட்டு விட்டார்.

Also read: ஜெயிலர் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்.. 600 கோடி வசூலை பார்த்ததும் ஜர்க் அடிச்ச சன் பிக்சர்ஸ்

Trending News