வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித் முன் திமிராக நடந்து கொண்ட கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தராமல் துரத்தி விட்ட சம்பவம்

ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்களை வைத்திருக்கும் அஜித்தை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சக நடிகைகள் அனைவரும் அஜித்தை ஒரு ஜென்டில்மேன் என்று புகழ்ந்து வருவார்கள். அந்த அளவுக்கு அவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அப்படிப்பட்டவரையே ஒரு நடிகை கடுப்பேற்றி இருக்கிறார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் அட்டகாசம் என்ற திரைப்படம் வெளிவந்தது. சரண் இயக்கிய அந்த திரைப்படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா நடித்திருந்தார். அந்த படத்தில் தீபாவளி தல தீபாவளி என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும்.

Also read : விஜய்க்கு போட்டியாக ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர்களுடன் அடுத்தடுத்து 5 படங்கள்

அதில் அஜித் ஆடிய ஆட்டம் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடலில் முதலில் அவருடன் இணைந்து ஆட கவர்ச்சி நடிகை ரகசியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் கமலின் நடிப்பில் வெளிவந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் சீனா தானா என்ற பாடலுக்கு ஆடி பிரபலமானவர்.

அந்த வகையில் அவர் அஜித்துடன் இணைந்து ஆட கமிட் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான படப்பிடிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஆடி முடித்த ரகசியா அஜித்திற்கு பக்கத்தில் இருக்கும் சாரில் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்து இருக்கிறார். இதை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து பார்த்திருக்கின்றனர்.

Also read : அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ரஜினியின் உறவு.. பல வருடங்களாக போராடியும் வாய்ப்பு கிடைக்கவில்லை

ஆனால் அதை பார்த்த அஜித் எதுவும் கூறாமல் எப்போதும் போல் சாதாரணமாகவே இருந்திருக்கிறார். அதன் பிறகு சில காட்சிகள் படமாக்கப்பட்டவுடன் ரகசியா நான் கிளம்ப வேண்டும் பேக் அப் செய்யுங்கள் என்று அதிகாரமாக கூறியிருக்கிறார். இதுதான் அஜித்திற்கு கடும் கோபத்தை வரவழைத்து இருக்கிறது.

அதனால் அவர் இந்த பெண் என்னுடைய படத்தில் நடிக்க கூடாது. உடனே போகச் சொல்லுங்கள் என்று கடும் கோபமாக இயக்குனரிடம் கூறியிருக்கிறார். அதனால் இயக்குனரும் அவரை இனிமேல் ஷூட்டிங் வர வேண்டாம் என்று கூறி அனுப்பி இருக்கிறார். அதன் பிறகு அந்த பாடல் அஜித் பலருடன் இணைந்து ஆடுவது போன்று படமாக்கப்பட்டது.

Also read : துணிவு ஷூட்டிங்கில் அஜித்தை காண திரண்ட கூட்டம்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி

Trending News