வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நடுவரை பதம் பார்த்த Batsman அடித்த பந்து.. சிங்கம் மாதிரி இருந்த மனுஷன்.. கிரிக்கெட்டில் பரபரப்பு!

கிரிக்கெட்டில் போட்டியின் போது பேட்ஸ்மேன் அடித்த பந்து தாக்கியதில் நடுவர் முகம் மாறிப்போன சம்பவம் நடந்துள்ளது.

கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்கள் விளையாட்டு என்று சொல்வார்கள். சிறுவர்கள் முதல் முதியோர் வரை எல்லோருக்கும் கிரிக்கெட் விளையாட பிடிக்கும். இந்த கிரிக்கெட் நம்ம ஊர்களில் லப்பர் பந்தில் விளையாடுவர், கிரிக்கெட் மைதானத்தில் கார்க் பந்தில் விளையாடுவர்.

கிராமங்களில் விளையாடினாலும் சரி, சர்வதேச மைதானத்தில் விளையாடினாலும் சரி, கார்க் பந்து எடை அதிகம் என்பதாலும், அது கடினமாக இருக்கும் என்பதாலும், போட்டியின் போது, காலில் பேட், கையில் பேட், தலைக்கு ஹெல்மெட், கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு விளையாடுவர்.

பேட்ஸ்மேனுக்குப் பின்னால் நிற்கும் விக்கெட் கீப்பரும் கூட வேகப்பந்து வீச்சின் போது கை, காலில் பேட், ஹெல்மெட் அணிந்துதான் பந்தைப் பிடிப்பார். பேட்ஸ்மேன் அருகே அரைட் ஸ்லிம்பில் பீல்டிங் செய்பவரும் விக்கெட் கீப்பர் மாதிரியே பாதுகாப்பு கவசங்கள் அணிருந்திருப்பார்.

நடுவர் டோனி டிநெப்ரேகாவின் முகத்தில் தாக்கிய பந்து!

இந்த நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் புறநகர் கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதில், பேட்ஸ்மேன் ஸ்ட்ரெயிட் டிரைவ் அடித்த பந்து அங்கு நின்றிருந்த சீனியர் நடுவர் டோனி டிநெப்ரேகாவின் முகத்தில் தாக்கியது. இதில் கடுமையான காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு முகத்தில் எலும்பு முறியவில்லை என்பதை உறுதி செய்தனர். அறுவைச் சிகிச்சை தேவைப்படாத நிலையில் அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இந்த எதிர்பாராத விபத்தில் இருந்து டோனி விரைவில் குணமடைய வேண்டுமென கிரிக்கெட் சங்கத்தினர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

சிங்கம் மாதிரி இருந்த மனுஷன் விரைவில் மீண்டு வர வாழ்த்து!

இச்சம்பவம் நடக்கும் முன் மைதானத்தில் ஒவ்வொரு போட்டியின் போதும் எத்தனை வெயிலிலும், பனியிலும் சிங்கம் மாதிரி நின்று அம்பயராக தன் வேலையைப் பார்த்து வந்த டோனிக்கு நடந்த இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இதற்கு முன் மைதானத்தில் இருந்த புகைப்படத்தையும், இப்போது சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு அவர் காயத்திலிருந்து விரைவில் மீண்டு களத்திற்கு வருவார் என்று ரசிகர்களும் வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.

Tony De Nobrega

Trending News