செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தூக்கி விட்டவர்களுக்கு செய்த துரோகம், ராஷ்மிகா படங்களில் நடிக்க தடை.. மேலும் அதிர்ச்சி கொடுத்த ரிஷப் ஷெட்டி

தெலுங்கு சினிமாவின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து மொழி படங்களிலும் தற்போது முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழில் இவர் வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்து முடித்துள்ளார். கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட திரையுலக தயாரிப்பாளர்கள் தாங்கள் எடுக்கும் படங்களில் இனிமேல் ராஷ்மிகா மந்தனாவுக்கு நடிக்க வாய்ப்பு தரக்கூடாது என முடிவு செய்துள்ளார்கள். சமீபத்தில் ரிஷப் ரெட்டி நடித்த காந்தார படம் 500 கோடி வசூல் வெற்றி பெற்றுள்ளது. இவர் ஒரு பேட்டியின்போது நான் ராஷ்மிகா உடன் நடிக்கமாட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

Also Read : கரகாட்டக்காரன் கோவை சரளாவிற்கு அடுத்தபடி நீங்கதான்.. பங்கமாக கலாய்த்ததால் நொந்து நூடுல்ஸ் ஆன ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா வை கன்னட திரையுலகம் எதற்காக இப்படி பழிவாங்குகிறது என்ற காரணம் தற்போது தெரியவந்துள்ளது. 2016 வருடம் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தயாரித்த ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்யப்போவதாக நிச்சயதார்த்தம் வரை சென்றார்கள்.

ஆனால் திடீரென ராஷ்மிகா பல மொழிகளில் வெற்றி பெற்றதன் விளைவாக அந்த காதலை மறந்து மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட தான் நடித்த முதல் கன்னடப் படத்தை பற்றி பேசாமல் அந்த படத்தின் தயாரிப்பாளர் பெயரையும் சொல்லாமல் அவமானப் படுத்தி இருக்கிறார்.

Also Read : இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட முதல் 10 இந்திய நடிகைகள்.. நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா!

இதனால் கன்னடத்திரையுலகம் எங்கள் ஊரில் பிறந்து எங்கள் மூலம் வாய்ப்பு பெற்று இப்போது வேறு மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தங்களை அவமானப்படுத்தி விட்டார் என்று கன்னட தயாரிப்பாளர் சங்கம் இவரை இனிமேல் கன்னட படத்தில் நடிக்க விடமாட்டோம் என்று முடிவு செய்துள்ளனர்.

முக்கியமாக ரக்ஷித் ஷெட்டி மற்றும் ரிஷப் ஷெட்டி இருவரும் ஒன்றாக இணைந்து பரம்வா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினர். இதனால்தான் ரிஷப் செட்டியும் ராஷ்மிகா மீது கோவத்தில் இருப்பதால் அவருடன் நடிக்க மறுத்துள்ளார். ரிஷப் ஷெட்டி தன் படத்தில் புதுமுக நடிகைகளுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பேன் என்றும் உறுதியாக கூறியுள்ளார். வாரிசு படத்தில் நடித்த பின் இப்படி ஒரு தடை வரவேண்டுமா என அதிர்ச்சியில் உள்ளாராம் விஜய்.

Also Read : கோடம்பாக்கத்திலேயே டேரா போட்ட ராஷ்மிகா.. வலையில் சிக்கிய விவாகரத்து நடிகர்

Trending News