புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜயகாந்துடன் நடிக்க மறுத்த பிரபலம்.. மொத்தமாய் ஸ்கோர் செய்த பிரபுதேவா

Actor Vijaykanth: பாசம் மற்றும் அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் வெளுத்து வாங்கும் கதாநாயகன் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் பெரும்பாலும் கருத்துள்ள படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார். இந்நிலையில் இவர் படத்தை நிராகரித்த பிரபலம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

90 காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு நினையாய் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தவர் விஜயகாந்த். இவர்கள் காலகட்டத்திலேயே, தன் தந்தையின் சுபாரிசில் நடிக்கும் வாய்ப்பு பெற்று தன் அழகான தோற்றத்தாலும், துள்ளலான நடிப்பாலும் பெண்களை கவர்ந்த நவரச நாயகனாய் வலம் வந்தவர் கார்த்திக்.

Also Read: இசைஞானியின் பயோபிக்கல் நடிக்கப் போகும் மாஸ் ஹீரோ.. இயக்கப் போவது நம்ம ஆட்கள் இல்ல

இவர் நடிப்பில் எண்ணற்ற படங்கள் வெற்றியை கண்டு இருக்கிறது. அவ்வாறு முன்னணி கதாநாயகனாக வலம் வந்த இவர், ஒரு காலகட்டத்தில் சினிமாவில் இடைவெளி விட்டு காணப்பட்டார். அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வந்த இவரின், காமெடி நிறைந்த படமான உள்ளத்தை அள்ளித்தா படம் இவருக்கு சூப்பர் ஹிட் ஆக அமைந்தது.

அதைத் தொடர்ந்து சினிமாவில் சற்று மார்க்கெட் இழந்து காணப்பட்ட நிலையில், 2004ல் சித்திக் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு, நமிதா, விஜயகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் எங்கள் அண்ணா. தங்கை பாசம் மிகுந்த கதாபாத்திரத்தில் தன் சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார் விஜயகாந்த்.

Also Read: புருஷன் முன்னாடியே காதலை சொன்ன பழனிச்சாமி.. அதிர்ச்சியில் கோபிக்கு வந்த நெஞ்சுவலி

மேலும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று, வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றது. இந்நிலையில் சித்திக் முதலில் இப்படத்தில் பிரபுதேவா ஏற்க இருந்த கதாபாத்திரத்தை கார்த்திக்கை நடித்த வைப்பதாக இருந்தாராம்.

இவை படத்தில் துணை கதாபாத்திரம் என்பதால் மார்க்கெட் இறங்க வாய்ப்பு உள்ளதால் இப்படத்தை நிராகரித்துள்ளார் கார்த்திக். அதன்பின் தான் பிரபுதேவா இப்படத்தில் நடித்து, ஸ்கோர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி

Trending News