ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

16 வருடமாகியும் புதுப்பொலிவுடன் இருக்கும் வேட்டையாடு விளையாடு.. வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு

Vettaiyaadu Vilaiyaadu: உலக நாயகனின் படங்கள் காலம் தாண்டி தான் பேசப்படும் என்பதற்கு உதாரணமாக இப்பொழுது வேட்டையாடு விளையாடு படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த சமயத்தில் பல புது படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் கமலின் வேட்டையாடு விளையாடு படத்தை பார்க்க தான் ஆர்வமாக சென்றிருக்கிறார்கள்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு படம் வெளியாகி இருந்தது. அடுத்தடுத்து இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக கமல் நடித்திருப்பார்.

Also Read : துருவ நட்சத்திரத்திற்கு பின் கௌதம் மேனன் செய்யப் போகும் சம்பவம்.. அதிரடி இரண்டாம் பாகம்

மேலும் படத்தில் வெறும் ஆக்சன் மட்டும் அல்லாமல் காதல் என அனைத்தையும் கலந்த கமர்சியல் படமாக கொடுத்திருந்தார் கௌதம் மேனன். அப்போது இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது உள்ள தொழில்நுட்பத்தால் சில மாற்றங்கள் செய்து வேட்டையாடு விளையாடு படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு பெரிய அளவில் இருக்கிறது. அதுவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹவுஸ் ஃபுல்லாக தியேட்டர்கள் இருந்து வருகிறது. இதன் மூலம் வேட்டையாடு விளையாடு படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இதை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Also Read : ரஜினி, கமலை டீலில் விட்ட லோகேஷ்.. இரண்டாம் பாகத்துடன் களமிறங்கும் அடுத்த கூட்டணி

அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் கௌதம் மேனன் தற்போது லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த சூழலில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும் என்பதை கௌதம் மேனன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்த செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் கமல் தற்போதைக்கு மணிரத்தினம், வினோத் போன்ற இயக்குனர்களுடன் அடுத்தடுத்து பணியாற்ற இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் விக்ரம் 2 படமும் லைன் அப்பில் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு வேட்டையாடு விளையாடு 2 படம் உருவாகுவது கடினம்.

vettaiyaadu-vilaiyaadu
vettaiyaadu-vilaiyaadu

Also Read : பாலிவுட்டில் பட்டைய கிளப்பும் 5 தமிழ் ஹீரோக்கள்.. கமலின் காலை வாரி விட்ட மோசமான அரசியல்

Trending News