வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குணசேகரனை செல்லாக் காசாக ஆக்கிய மருமகள்கள்.. ஜனனி ஜீவானந்த பிளான் வொர்க் அவுட் ஆகுமா?

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் கடந்த சில தினங்களாக குணசேகரனை காட்டப்படவில்லை. அதற்கு பதிலாக ஜீவானந்தம் ஈஸ்வரியின் சொல்லப்படாமல் போன காதல் மற்றும் ஏக்கத்துடனே முடிந்து போன வலிகளை காட்டி விறுவிறுப்பாக ஆக்கியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் சாதித்து காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் நந்தினியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஜனனி மற்றும் அங்கு இருக்கும் பெண்கள் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அதில் நந்தினிக்கு பிறந்தநாள் பரிசாக ஜனனி “நாண்டி புட்ஸ்” என்று சமையல் ஆர்டரை முறைப்படி அப்ரூவல் வாங்கி கொடுக்கிறார். இதை எதிர்பார்க்காத நந்தினி ஆனந்தக் கண்ணீரில் மிதக்க ஆரம்பித்து விட்டார்.

Also read: பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

தற்போது நந்தினி தொழிலதிபராக ஆகிவிட்டார், இனிமேல் கதிர் உடைய மொத்த ஆட்டமும் அடங்கிவிடும். அடுத்தபடியாக அந்த வீட்டில் இருக்கும் நான்கு மருமகளும் சொந்தக்காலில் நின்று சாதனை படைக்கப் போகிறார்கள். ஏற்கனவே குணசேகரன் சொத்து போன துக்கத்திலிருந்து மீள முடியாமல் பைத்தியக்காரர் போல் புலம்புகிறார்.

இப்பொழுது பெண்களும் நம்மளை விட முன்னேறி விட்டார்கள் என்ற விஷயம் தெரிந்தால் உண்மையிலேயே பித்து பிடித்தது போல் ஆகி விடுவார். இதனால் குணசேகரனின் நிலைமை ஒன்னுமே இல்லாத செல்லா காசாக மாறிவிடும். இந்த ஒரு விஷயத்தை மனதில் வைத்து தான் ஜனனி மறுபடியும் அந்த வீட்டில் பெண்களின் உரிமைக்காக போராடுவதற்கு காலடி எடுத்து வைத்தார். அந்த விஷயத்தில் கமுக்கமாக இருந்து ஜனனி சாதித்து விட்டார் என்றே சொல்லலாம்.

Also read: சொத்துக்காக செத்து செத்து விளையாடும் குணசேகரன்.. நந்தினி எடுக்க போகும் புது அவதாரம்

அடுத்தபடியாக சக்திக்கு அம்மம் போட்டு விடுகிறது. அந்த நேரத்தில் இவருடைய நண்பரிடம் இருந்து ஜீவானந்தத்தை பற்றி தகவல் கிடைத்ததாக வர சொல்லி போன் வருகிறது. ஆனால் இவரால் போக முடியாதுதால் ஜனனி அதை விசாரிப்பதற்கு கிளம்பி விடுகிறார். இது ஒரு விதத்தில் நல்ல விதமாக இருந்தாலும், இந்த நேரத்தில் சக்திக்கு பக்கத்தில் ஆறுதலாக ஜனனி இருந்தால் இன்னும் இவர்களுடைய புரிதல் நன்றாக அமைந்திருக்கும்.

ஆனால் சொத்துக்காக ஜீவானந்தத்தை பார்க்கப் போவது கொஞ்சம் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. அதுவும் இந்த நேரத்தில் இவர் போயிருக்க அவசியம் இல்லை. இதற்கு அடுத்து ஜீவானந்தத்தை சந்திக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்து விடுகிறது. இந்த சந்திப்பில் ஜீவானந்தத்தை பற்றி எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ள போகிறார் ஜனனி. அதன் பிறகு ஜனனி ஜீவானந்தம் சேர்ந்து செய்யப் போகும் விஷயங்கள்தான் குணசேகரனை மொத்தமாக காலி பண்ணப் போகிறது.

Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

Trending News