Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சிம்புக்கு சொன்ன கதையில் பிரதீப்பா.? பதறிப் போய் இயக்குனர் கொடுத்த அப்டேட்

சிம்புக்கு சொன்ன கதையில் பிரதீப்பா.? பதறிப் போய் இயக்குனர் கொடுத்த அப்டேட்

Actor Simbu : இளம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லவ் டுடே படத்தின் தயாரிப்பு […]

Actor Simbu : இளம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் லவ் டுடே படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் உடன் முன்பே பிரதீப் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் போட்டிருந்தார். ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரதீப்பின் அடுத்த படம் உருவாகிறது.

ஏற்கனவே அஸ்வத் சிம்பு படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. அதோடு சிம்புவுக்கு கதையும் சொல்லி ஓகே வாங்கி விட்டார். இப்போது பிரதீப் பட அறிவிப்பு வெளியான உடன் சிம்பு கதையில் தான் இவர் நடிக்கிறார் என்று செய்தி உலாவ தொடங்கியது.

இயக்குனர் அஸ்வத் கொடுத்த அப்டேட்

உடனே பதறிப்போன அஸ்வத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ட்வீட் ஒன்று போட்டு இருக்கிறார். அதாவது ஓ மை கடவுளே படத்தை பார்த்து விட்டு தன்னை அழைத்ததாக அஸ்வத் கூறியிருக்கிறார். அதன் பின்பு சிம்புவுக்காக ஒரு கதை தயார் செய்துள்ளேன்.

ashwath
ashwath

அவர் இந்தப் படத்திற்கு தயாரான உடன் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார். சிம்புவுக்கு தயார் செய்த கதை வேறு மற்றும் பிரதீப்பின் கதை வேறு என்றும் குறிப்பிட்டார். மேலும் பிரதீப் நடிப்பது சென்னை கதை களத்தை பின்புலமாக கொண்டது.

சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக அந்த கதை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஸ்வத்தின் இந்த பதிவால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.